Close Menu
    What's Hot

    ’ஜனநாயகன்’ ரிலீஸ்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்… மெரினாவில் ஜொலித்த ஃப்ளையிங் எல்.இ.டி

    நீட் போராட்டம்: உண்ணாவிரதத்தை கைவிட சோனம் வாங்சுக்  புதிய நிபந்தனை!  

    ‘நீட்’ போராட்ட தடியடி: டெல்லி போலீசுக்கு உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»கிழிந்த சட்டை, மூக்கில் ரத்தம்… டெல்லியை உலுக்கிய ராகுல் காந்தியின் போராட்டம்: காங்கிரஸ் கணக்கு பலித்ததா?
    இந்தியா

    கிழிந்த சட்டை, மூக்கில் ரத்தம்… டெல்லியை உலுக்கிய ராகுல் காந்தியின் போராட்டம்: காங்கிரஸ் கணக்கு பலித்ததா?

    Editor web2By Editor web2July 22, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Rahul protest 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அரசியலில் கொள்கைகளை விடவும், மக்களின் கவனத்தை ஈர்க்கும் ‘காட்சி பதிவுகளே’ பெரும்பாலும் மக்களின் கவனத்தை தீர்மானிக்கின்றன. செவ்வாய்க்கிழமை அன்று டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்திற்கு வெளியே அரங்கேறிய நாடகத்தனமான சம்பவங்கள், காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் ரீதியாகப் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.

    எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, நீட் தேர்வு முறைகேடு மற்றும் மாணவர்கள் மீதான காவலத்துறைத் தாக்குதலைக் கண்டித்து  பிரதமர் இல்லத்திற்கு வெளியே திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது காவல்துறையினரால் அவர் வலுக்கட்டாயமாகத் தரையில் இழுத்துச் செல்லப்பட்டு, மூக்கில் ரத்தம் வழிய, வெள்ளை நிற டீ-சர்ட்டில் ரத்தக் கறைகளுடன் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். ஒரு காலணியைக் கூட இழந்து, தூக்கிச் செல்லப்பட்ட ராகுல் காந்தியின் அந்தப் புகைப்படங்களும் வீடியோக்களும் நாடு முழுவதும் சமூக வலைத்தளங்களில் பரவி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளன.

    மூத்த பத்திரிகையாளர்கள் சொல்வது என்ன?

    இச்சம்பவம் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள மூத்த பத்திரிகையாளர்கள், “ஒரு அமைதியான போராட்டத்தையோ அல்லது நாடாளுமன்றத்தில் விவாதத்தையோ அனுமதிப்பதற்குப் பதிலாக, மக்கள் பிரச்சினைக்காகக் குரல் கொடுத்த எதிர்க்கட்சித் தலைவரைத் தாக்கி இழுத்துச் சென்ற காட்சிப் படிமங்கள் மூலம், மத்திய அரசே காங்கிரஸுக்கு அவர்கள் எதிர்பார்த்த அரசியல் அடையாளத்தை வழங்கிவிட்டது. இது மோடி அரசின் ‘சுய கோல்’ (Self-goal) ஆக அமைந்து விட்டது” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

    Rahul protest 2

    1999-ஆம் ஆண்டு நடந்த இந்திய விமானக் கடத்தலின் போது அப்போதைய பிரதமர்  வாஜ்பாய் இல்லத்தின் முன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் போராட்டம் நடத்தியதற்குப் பிறகு, பிரதமர் இல்லத்தின் முன் ஒரு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு போராட்டம் நடத்துவது வரலாற்றிலேயே இதுவே முதல்முறையாகும்.

    காங்கிரஸின் வியூகமும் பலன்களும்

    கடந்த சில வாரங்களாக ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) மற்றும் சோனம் வாங்சுக் ஆகியோர் ஜந்தர் மந்தரில் நடத்தி வந்த போராட்டங்கள் தேசிய அளவில் பெரிய கவனத்தைப் பெற்றிருந்தன. இதனால், தேர்வு முறைகேடு விவகாரத்தில் காங்கிரஸின் குரல் மங்கிப்போயிருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், ராகுல் காந்தியின் இந்த அதிரடி நடவடிக்கை ஒரே நாளில் அனைத்தையும் மாற்றியமைத்துள்ளது.மாணவர் போராட்டத்தின் முதன்மைத் தலைவராக ராகுல் காந்தியை மீண்டும் இது மையப் புள்ளிக்குக் கொண்டு வந்துள்ளது.

    பிரதமருக்கு நேரடி அழுத்தம்

    வெறும் கல்வி அமைச்சரின் ராஜினாமாவோடு நிற்காமல், விவகாரத்தின் மையப்புள்ளியாகப் பிரதமர் மோடியையே நேரடியாகப் பொறுப்பேற்கச் செய்யும் வியூகத்தை இது சாத்தியமாக்கியுள்ளது. காவல்துறையின் எல்லைமீறிய நடவடிக்கையால் ராகுல் காந்திக்கு ஏற்பட்ட காயங்கள், அவருக்கு மக்கள் மத்தியில் ஒரு போராட்டக்காரருக்கான தீவிரமான அனுதாப அலையை உருவாக்கியுள்ளன.

    pm modi neet

    “இந்தியாவில் ஜனநாயகம் இப்போது நேரலையில் நடந்துகொண்டிருக்கிறது” எனப் போலீஸ் பேருந்தில் ஏறும் முன் ராகுல் காந்தி கூறிய வார்த்தைகள், தற்போதைய இந்திய அரசியலில் காங்கிரஸ் மீதான பார்வையை முற்றிலும் மாற்றியமைத்துள்ளது. இந்த எழுச்சியுடன் காங்கிரஸ்  மீண்டெழுமா இல்லை வழக்கம்போல் ஒருநாள் கூத்துடன் அடங்கிப்போய்விடுமா என்பது வரும் நாட்களில் தான் தெரிய வரும்.

    CongressOptics NEETPaperLeak2026 PMHouseProtest rahulgandhi
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை பாதுகாக்க முயற்சி… நீதிமன்றம் கண்டனம்
    Next Article நீட் வினாத்தாள் கசிவால் மாணவர்களின் நம்பிக்கை பாதிப்பு; மத்திய அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் – அண்ணாமலை
    Editor web2
    • Website

    Related Posts

    ’ஜனநாயகன்’ ரிலீஸ்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்… மெரினாவில் ஜொலித்த ஃப்ளையிங் எல்.இ.டி

    July 22, 2026

    நீட் போராட்டம்: உண்ணாவிரதத்தை கைவிட சோனம் வாங்சுக்  புதிய நிபந்தனை!  

    July 22, 2026

    ‘நீட்’ போராட்ட தடியடி: டெல்லி போலீசுக்கு உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ’ஜனநாயகன்’ ரிலீஸ்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்… மெரினாவில் ஜொலித்த ஃப்ளையிங் எல்.இ.டி

    நீட் போராட்டம்: உண்ணாவிரதத்தை கைவிட சோனம் வாங்சுக்  புதிய நிபந்தனை!  

    ‘நீட்’ போராட்ட தடியடி: டெல்லி போலீசுக்கு உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!

    “மாணவர்களின் கோபத்தை ‘தீய சக்திகள்’ பயன்படுத்த விடக்கூடாது” – ப்ரீத்தி ஜிந்தா

    ‘ஆகாயம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..! 

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.