முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக பதிவான வழக்கில் கைது செய்யப்பட்ட விளத்திக்குளம் திமுக எம் எல் ஏ மார்கண்டேயன் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
திமுக பொதுக்கூட்டத்தில், தமிழக முதல்வா் ஜோசப் விஜய் குறித்து, விளாத்திகுளம் எம்எல்ஏ மாா்க்கண்டேயன் அவதூறாக பேசியதாக தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கில் கடந்த திங்கள்கிழமை கைது செய்யப்பட்ட மாா்க்கண்டேயன் நீதிமன்ற உத்தரவுப்படி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் ஜாமீன் கோரி மார்கண்டேயனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கோரி போலீசார் தாக்கல் செய்த மனுவை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதேபோல, .ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவையும் தூத்துக்குடி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரியும், ஜாமீன் கோரியும் மார்கண்டேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக்கோரி நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு வழக்கறிஞர் எஸ்.காசிராஜன் முறையிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி
பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு எடுப்பதாக தெரிவித்தார்.
