Close Menu
    What's Hot

    கரூர் நெரிசல்: ‘31 பேரின் அரசு வேலை ரத்து உத்தரவை நீதிமன்றம் கருணையுடன் பரிசீலிக்க வேண்டும்’! பாதிக்கப்பட்டோர் கோரிக்கை!

    குமரி: கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல தடை: லாரி உரிமையாளர்கள் மறியல்!

    நாமக்கல் கவிஞர் மாளிகைக்குச் செல்கிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»CJP போராட்டம் வாபஸ்: டெல்லியில் மெட்ரோ நிலையங்களும் மீண்டும் திறப்பு!
    Featured

    CJP போராட்டம் வாபஸ்: டெல்லியில் மெட்ரோ நிலையங்களும் மீண்டும் திறப்பு!

    Editor web1By Editor web1July 25, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    11 9
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நீட் விவகாரம் தொடர்பாக CJP போராட்டத்தையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைக்காக மூடப்பட்டிருந்த டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

    நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தன.

    இதன் காரணமாகப் பாதுகாப்பு கருதி, ராஜீவ் சௌக், படேல் சௌக், மண்டி ஹவுஸ், சென்ட்ரல் செக்ரடேரியட், புதுடெல்லி உள்ளிட்ட மத்திய டெல்லி பகுதியில் உள்ள 18 மெட்ரோ இரயில் நிலையங்களை டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் தற்காலிகமாக மூடியிருந்தது. இதனால் அலுவலகப் பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

    இந்தநிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோருடன் போராட்டக் குழுவினர் நடத்திய 3-ம் கட்டப் பேச்சுவார்த்தையில் முக்கிய உடன்பாடுகள் எட்டப்பட்டன. மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கவும் மத்திய அரசு ஒப்புக்கொண்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

    போராட்டம் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு, டெல்லி மெட்ரோ அமைப்பின் அனைத்து நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களும் பயணிகள் சேவைக்காக முழுமையாகத் திறக்கப்பட்டு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது ‘X’ பக்கத்தில்,  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    #DelhiMetro #StudentProtest #CJP #NEETIssue #TNTalks
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாவிரி விவகாரம்: ‘அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துங்கள்’- முதல்வர் விஜய்க்கு இ.பி.எஸ் வலியுறுத்தல்!
    Next Article 2-வது டி20: ஜிம்பாப்வேயை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தித் தொடரைக் கைப்பற்றியது இந்தியா!
    Editor web1
    • Website

    Related Posts

    கரூர் நெரிசல்: ‘31 பேரின் அரசு வேலை ரத்து உத்தரவை நீதிமன்றம் கருணையுடன் பரிசீலிக்க வேண்டும்’! பாதிக்கப்பட்டோர் கோரிக்கை!

    July 27, 2026

    நாமக்கல் கவிஞர் மாளிகைக்குச் செல்கிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

    July 27, 2026

    சிவகாசி: பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி- முதல்வர் விஜய்

    July 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கரூர் நெரிசல்: ‘31 பேரின் அரசு வேலை ரத்து உத்தரவை நீதிமன்றம் கருணையுடன் பரிசீலிக்க வேண்டும்’! பாதிக்கப்பட்டோர் கோரிக்கை!

    குமரி: கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல தடை: லாரி உரிமையாளர்கள் மறியல்!

    நாமக்கல் கவிஞர் மாளிகைக்குச் செல்கிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

    சிவகாசி: பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி- முதல்வர் விஜய்

    தவெகவில் சேருகிறாரா குஷ்பு..? – தலைமைச் செயலகத்துக்கு திடீர் வருகையால் பரபரப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.