மதுரை திருப்பாலை பகுதியில் அமைந்துள்ள யாதவா பெண்கள் கல்லூரியில் நடைபெற்று வரும் ரோட்டரி கிளப் நிகழ்ச்சியில் அமைச்சர் CTR நிர்மல்குமார் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது….
காவல் நிலையங்களிலோ சிறையிலோ நடைபெறும் மரணங்களுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆட்சிகள் போல் நாங்கள் எதையும் மறைக்கவில்லை. மாறாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
கடந்த ஆட்சியில் பார்ட்டி பண்ட் எங்கு வசூலிக்கப்பட்டது என மக்களுக்குத் தெரியும்
பத்திரப்பதிவுத் துறையில் அமைச்சருக்காக கட்டிங், கமிசன் கேட்டு வாங்கினார்கள். பெர்சன்டேஜ் போட்டு வாங்கினார்கள்.
பாட்டிலுக்கு 10 ரூபாய் நிறுத்தப்பட்டது போல, அனைத்து இடங்களிலும் பார்ட்டி பண்ட் நிறுத்தியுள்ளோம்.
தகுதியின் அடிப்படையில்தான் தரமான அரசு வழக்கறிஞர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். லஞ்சம் லாவண்யம் இல்லாமல் நியமனம் நடைபெற்று வருகிறது.
ஜனநாயக படம் குறித்த கேள்விக்கு, படம் எப்படி என மக்களுக்கு தெரியும். நம்ம முதலமைச்சர் 3 வருடம் பட்ட கஷ்டங்களுக்கு இன்று தீர்வு கிடைத்துள்ளது. படம் ஜனவரியில் வந்திருந்தால் கூட இப்படி ஒரு வரவேற்பு இருந்திருக்காது என்றார்.
பாமக கூட்டணி என்பது யூகத்தின் அடிப்படையிலான கேள்வி.
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவிற்கு முதலமைச்சர் செல்வது ஆக்கப்பூர்வமான பணிகளை செய்யத்தான். சட்ட ரீதியானவற்றை விட்டுக்கொடுக்கப் போவதில்லை. நமது மாநிலத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.
நீட் விவகாரத்தில் நீட் வேண்டாம் என்பதே நம் நிலைப்பாடு ; தர்மேந்திர பிரதான் பதவி விலகினாலும் நீட் இருக்கும். நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.
நீட் தேர்வில் திமுக ஸ்டிக்கர் ஒட்டுகிறது என்பது குறித்த கேள்விக்கு திமுக இதுபோன்ற கேவலமான வேலை பார்க்க வேண்டாம், நீட் ரகசியம் குறித்து இப்போது வரை உதயநிதி ஸ்டாலின் பேசவில்லை
உதயநிதிக்கு பாராளுமன்றம் என்றால் , சட்டமென்றால் என்னவென்று தெரியாது.
மாணவர்கள் போராட்டத்தில் ஸ்டிக்கர் ஒட்ட நினைத்தால் அசிங்கப்பட்டுதான் வருவார்கள்.
நீட் தேர்வு குறித்து பேச திமுகவிற்கு அருகதை இல்லை எனக்கூறினார்.
