தமிழக வெற்றிக் கழக அரசு இளைஞர்களின் அரசு என்ற போலி பிம்பம் அடித்து நொறுக்கப்பட்டிருப்பதாக திண்டுக்கல் ஐ. லியோனி தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாடநூல் கழகத் தலைவர் லியோனி, தனது எக்ஸ் தலப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதில்,
இந்தியா முழுவதும் CJP சார்பில் மாணவர்கள் நடத்திய அறவழிப்போராட்டத்தினால் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியது மாபெரும் வெற்றி எனத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக உள்ளிட்ட மக்களாட்சியின் மீது நம்பிக்கை உள்ள அனைத்து கட்சிகளும், நீலம் பண்பாட்டு இயக்கம் ஆகியவை ஆதரவு தெரிவித்தார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
போராட்டம் என்றால் என்னவென்று தெரியாமல் நாடகம் போடும் பாஜகவின் கைக்கூலியாக செயல்பட்டு, மாணவர்களை தாக்கிய தவெக அமைச்சர் ராஜ்மோகனை விரட்டியடித்தது, இளைஞர்களின் அரசு என்ற போலி பிம்பத்தை அடித்து நொறுக்கியுள்ளதாக திண்டுக்கல் லியோனிதெரிவித்துள்ளார்.
