Close Menu
    What's Hot

    வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா!. 2024 சட்டத்திற்கும் புதிய 2026 மசோதாவிற்கும் உள்ள முக்கிய வேறுபாடுகள்!. 

    காவு வாங்கும் கல்லட்டி மலை பாதை..!! இன்று முதல் சுற்றுலா பயணிகள் செல்ல தடையாம்..!!

     “டெல்லி போராட்டம்: நானாக இருந்தால் சுட்டுக்கொன்றிருப்பேன்..!” –ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதியின் சர்ச்சை பேச்சு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»வேட்புமனுவில் தகவலை மறைத்தாரா மு.க.ஸ்டாலின்? – ஜூலை 29-இல் உயர்நீதிமன்றம் விசாரணை
    Featured

    வேட்புமனுவில் தகவலை மறைத்தாரா மு.க.ஸ்டாலின்? – ஜூலை 29-இல் உயர்நீதிமன்றம் விசாரணை

    Editor TN TalksBy Editor TN TalksJuly 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    007 mks
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கொளத்தூர் தொகுதியில் போட்டியிட திமுக தலைவர் ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில் தகவல்களை மறைத்தது தொடர்பாக வழக்கின் விசாரணையை ஜூலை 29 ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

    நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், சென்னை கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் போட்டியிட்டார். அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில், திமுக அறக்கட்டளையின் நிர்வாகியாக இருப்பதையும், அறக்கட்டளை சார்பாக செங்கல்பட்டு மாவட்டம், கடம்பாடியில் 2 கோடியே 27 லட்சம் ரூபாய்க்கு சொத்து வாங்கிய விவரத்தை தெரிவிக்கவில்லை எனவும், தகவலை மறைத்தது தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, தொகுதியில் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் போட்டியிட்ட  திருஞானசம்பந்தம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், வேட்புமனுவில் தகவல்களை மறைத்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், தனது மனுவை பரிசீலித்து, விசாரணை நடத்தவும், குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரியுள்ளார்.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், வேட்புமனுவில் அறக்கட்டளை குறித்த விவரங்களை சமர்ப்பிக்க அவசியமில்லை எனத் தெரிவித்தார்.

    அப்போது நீதிபதிகள், வேட்புமனுவில் என்ன தகவல்கள் மறைக்கப் பட்டுள்ளன? என்பதற்கான ஆதாரங்கள் எங்கே என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் எம்.எல்.ரவியிடம் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு மனுதாரர் தரப்பில், சில ஆவணங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. அந்த ஆவணங்கள் தமிழில் இடம் பெற்றிருந்ததால், அவற்றை மொழிபெயர்த்து தாக்கல் செய்ய மனுதாரருக்கு அவகாசம் வழங்கிய நீதிபதிகள், விசாரணையை ஜூலை 29 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

    Election Petition M.k. stalin Madras High Court Nomination Papers Tamil Nadu Politics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநீண்ட கால சஸ்பெண்டை ஏற்றுக்கொள்ள முடியாது … உயர்நீதிமன்றம் தடாலடி உத்தரவு!
    Next Article இந்தியாவின் வெள்ளிப்பதக்க ஹீரோ.. யார் இந்த தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டி?
    Editor TN Talks

    Related Posts

    வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா!. 2024 சட்டத்திற்கும் புதிய 2026 மசோதாவிற்கும் உள்ள முக்கிய வேறுபாடுகள்!. 

    July 27, 2026

    காவு வாங்கும் கல்லட்டி மலை பாதை..!! இன்று முதல் சுற்றுலா பயணிகள் செல்ல தடையாம்..!!

    July 27, 2026

     “டெல்லி போராட்டம்: நானாக இருந்தால் சுட்டுக்கொன்றிருப்பேன்..!” –ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதியின் சர்ச்சை பேச்சு

    July 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா!. 2024 சட்டத்திற்கும் புதிய 2026 மசோதாவிற்கும் உள்ள முக்கிய வேறுபாடுகள்!. 

    காவு வாங்கும் கல்லட்டி மலை பாதை..!! இன்று முதல் சுற்றுலா பயணிகள் செல்ல தடையாம்..!!

     “டெல்லி போராட்டம்: நானாக இருந்தால் சுட்டுக்கொன்றிருப்பேன்..!” –ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதியின் சர்ச்சை பேச்சு

    இனி நடக்கப்போகும் சம்பவத்தை மட்டும் பாருங்க..!! மார்க்கண்டேயனை நேரில் சந்தித்த உதயநிதி பாய்ச்சல்..!!

    காவிரி உரிமையில் சமரசம் கூடாதாம்..!! கர்நாடகா செல்லும் முதல்வர் விஜய்க்கு துரைமுருகன் ‘வார்னிங்’..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.