Close Menu
    What's Hot

    ஆய்வுக்காக ஸ்கூட்டியில் பறந்து வந்த அமைச்சர் ஆனந்த்..!! காரணம் இதுதான்..!!

    “போராடினாலே தடியடியா…?” – உச்ச நீதிமன்றம் காட்டம்

    நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்…  விஜய்யை கடுமையாகச் சாடிய கோகுல இந்திரா!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»இணையத்தில் வெளியான ஜனநாயகன்… திருட்டுத் தனமாகப் பார்த்தவருக்கு நிபந்தனை முன் ஜாமீன்!
    Featured

    இணையத்தில் வெளியான ஜனநாயகன்… திருட்டுத் தனமாகப் பார்த்தவருக்கு நிபந்தனை முன் ஜாமீன்!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    011 jananayagan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருட்டுத்தனமாக வெளியிடப்பட்ட ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் பார்த்தார் என்பதற்காக வழக்குபதிவு செய்யப்பட்டவருக்கு  முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக, தனது கடைசிப்படம் என முதலமைச்சர் விஜய் அறிவித்து, நடித்த ஜனநாயகன் படம், கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தணிக்கைக் குழுவின் மறு ஆய்வில் படம் இருந்த நிலையில், ஏப்ரல் 3ஆம் தேதி சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியானது.

    படத் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்‌ஷன்ஸ் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவுசெய்யப்பட்ட வழக்கை சென்னை காவல் துறையின் சைபர் கிரைம் பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் சேலம் மாவட்டம் மேட்டூரை  எறகுண்டப்பட்டியை சேர்ந்த ஆர்.பிரதீப்குமார் என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி பிரதீப்குமார் தாக்கல் செய்த மனு நீதிபதி சி.குமரப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது, மனுதாரர் தரப்பில் ஜனநாயகன் படம் திருட்டுத்தனமாக வெளியான போது பதிவு செய்யப்பட்ட பிரதான வழக்கில் அந்தப் படத்தை பார்த்தார் என்ற காரணத்திற்காக மட்டும் மனுதாரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    காவல்துறை தரப்பில் விசாரணை நீதிமன்றத்தில் ஆரம்பகட்ட குற்றப்பத்திரிகை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது, மனுதாரரரை கைதுசெய்து விசாரிக்காவிட்டால், படம் கசிவு தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களை கண்டுபிடிக்க முடியாமல் போய்விடும் என தெரிவிக்கப்பட்டது.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குமரப்பன், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் சிலர் ஏற்கனவே சட்டப்படியான ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர், இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது,  ஆரம்பத்தில் ஒரு குற்றவாளியாக கருதப்படவில்லை, சட்டவிரோதமாக வெளியிடப்பட்ட திரைப்படத்தை மனுதாரர் பார்த்தார் என்பதைத் தவிர, வேறு எந்தக் கடுமையான குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை; இவற்றின் அடிப்படையில் மனுதாரருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கப்படுகிறது என உத்தரவிட்டுள்ளார்.

    anticipatory bail Cyber Crime Jananayagan movie Madras High Court Online Piracy
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉதவி பேராசிரியர் நியமனம்.. தடை கோரிய பொதுநல வழக்கு வாபஸ்! சென்னை ஐகோர்ட் தள்ளுபடி!
    Next Article மாணவர்கள் மீது பெல்லட் கன், AK-47 பயன்பாடு… அமித் ஷா எங்கே ஒளிந்திருக்கிறார்? – கே.சி. வேணுகோபால் ஆவேசம்
    Editor TN Talks

    Related Posts

    ஆய்வுக்காக ஸ்கூட்டியில் பறந்து வந்த அமைச்சர் ஆனந்த்..!! காரணம் இதுதான்..!!

    July 27, 2026

    “போராடினாலே தடியடியா…?” – உச்ச நீதிமன்றம் காட்டம்

    July 27, 2026

    நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்…  விஜய்யை கடுமையாகச் சாடிய கோகுல இந்திரா!

    July 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆய்வுக்காக ஸ்கூட்டியில் பறந்து வந்த அமைச்சர் ஆனந்த்..!! காரணம் இதுதான்..!!

    “போராடினாலே தடியடியா…?” – உச்ச நீதிமன்றம் காட்டம்

    நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்…  விஜய்யை கடுமையாகச் சாடிய கோகுல இந்திரா!

    முதலமைச்சர் தனிப்பிரிவு முன் அவசர பாதுகாப்பு ஏற்பாடு..!! தீயணைப்பு வீரர்கள் நியமனம்!

    வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா!. 2024 சட்டத்திற்கும் புதிய 2026 மசோதாவிற்கும் உள்ள முக்கிய வேறுபாடுகள்!. 

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.