Close Menu
    What's Hot

    கரூர் உயிரிழப்பு: 31 குடும்பங்களுக்கு வழங்கிய அரசு வேலை ரத்து… உயர் நீதிமன்றம் அதிரடி!

    இடுக்கு பிள்ளையார் கோவிலுக்கு போறீங்களா? இவங்களுக்கெல்லாம் அனுமதி இல்லையாம்..!!

    என் ஏரியாவுக்குள்ள வர்றியா? ஜெகதீஸ்வரி பெயரில் பரவும் ஆடியோ.. அரசியல் களத்தில் புதிய விவாதம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்…  விஜய்யை கடுமையாகச் சாடிய கோகுல இந்திரா!
    Featured

    நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்…  விஜய்யை கடுமையாகச் சாடிய கோகுல இந்திரா!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    013 kokula indira
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அதிமுகவைத் தீர்ந்துபோன சக்தி என விமர்சிக்கும் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யை, “நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்” எனவும், “முதலில் விஜய் வாயைத் திறந்து பேச வேண்டும்” எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கடுமையாக விமர்சித்தார்.

    சென்னை மதுரவாயலை அடுத்த நெற்குன்றம் பகுதியில் பள்ளி, வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அரசு மதுபானக் கடையை மூட வலியுறுத்தி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    145-ஆவது வார்டு அதிமுக கவுன்சிலர் சத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் பேசிய கோகுல இந்திரா, “மதுபானக் கடையை மூட வேண்டியது எம்.எல்.ஏ-வின் பணிதான். ஆனால் அதைச் செய்யாமல், மதுரவாயல் எம்.எல்.ஏ சிறுபிள்ளைத்தனமாகச் செயல்படுகிறார். மக்கள் போராடிக்கொண்டிருக்கும் நேரத்தில், ‘ஜனநாயகம்’ படத்தைப் பார்க்க வைப்பதற்காக அமைச்சர்களுக்கும் பிரபலங்களுக்கும் ரோகிணி திரையரங்கில் இடம் ஒதுக்கீடு செய்வதில் மட்டுமே மதுரவாயல் எம்.எல்.ஏ கவனம் செலுத்துகிறார்” எனக் குற்றம்சாட்டினார்.

    மேலும், “அதிமுகவைத் தீர்ந்துபோன சக்தி எனக் கூறும் விஜய், முதலில் வாயைத் திறந்து பேச வேண்டும். நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள் எல்லாம் அதிமுகவை விமர்சிக்கக் கூடாது” என்றும் கடுமையாகத் தன் கண்டனத்தைப் பதிவுசெய்தார்.

    AIADMK Gokula Indira Joseph Vijay Political criticism Tamil Nadu Politics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுதலமைச்சர் தனிப்பிரிவு முன் அவசர பாதுகாப்பு ஏற்பாடு..!! தீயணைப்பு வீரர்கள் நியமனம்!
    Next Article “போராடினாலே தடியடியா…?” – உச்ச நீதிமன்றம் காட்டம்
    Editor TN Talks

    Related Posts

    கரூர் உயிரிழப்பு: 31 குடும்பங்களுக்கு வழங்கிய அரசு வேலை ரத்து… உயர் நீதிமன்றம் அதிரடி!

    July 27, 2026

    இடுக்கு பிள்ளையார் கோவிலுக்கு போறீங்களா? இவங்களுக்கெல்லாம் அனுமதி இல்லையாம்..!!

    July 27, 2026

    என் ஏரியாவுக்குள்ள வர்றியா? ஜெகதீஸ்வரி பெயரில் பரவும் ஆடியோ.. அரசியல் களத்தில் புதிய விவாதம்!

    July 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கரூர் உயிரிழப்பு: 31 குடும்பங்களுக்கு வழங்கிய அரசு வேலை ரத்து… உயர் நீதிமன்றம் அதிரடி!

    இடுக்கு பிள்ளையார் கோவிலுக்கு போறீங்களா? இவங்களுக்கெல்லாம் அனுமதி இல்லையாம்..!!

    என் ஏரியாவுக்குள்ள வர்றியா? ஜெகதீஸ்வரி பெயரில் பரவும் ஆடியோ.. அரசியல் களத்தில் புதிய விவாதம்!

     ‘இணையற்ற இலக்கியத் திறமை’…ஞானபீட விருது பெற்றவைரமுத்துவிற்கு அமித் ஷா வாழ்த்து!

    சாதி சான்றிதழ் விவகாரத்தில் தமிழக அரசின் புதிய உத்தரவு.. யாருக்கெல்லாம் பொருந்தும்?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.