இன்று உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினம் கொண்டாடப்படும் நிலையில் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர். TK. பிரபு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது…
இயற்கை வளங்கள் என்பது நமது வாழ்வின் அடித்தளம்.. மனிதகுலத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் விலைமதிப்பற்ற செல்வங்கள்..!
இயற்கையைப் பாதுகாப்பது என்பது இன்றைய தேவையை மட்டும் பூர்த்தி செய்வதற்காக அல்ல; வருங்கால சந்ததியினருக்கு வளமான, பாதுகாப்பான மற்றும் நிலையான உலகை விட்டுச் செல்லும் நமது தார்மீகப் பொறுப்பாகும்.
தமிழ்நாடு அரசு, முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையில், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் வழிகாட்டுதலில் நீர்நிலைகள் பாதுகாப்பு, மரக்கன்றுகள் நடுதல், மழைநீர் சேகரிப்பு, இயற்கை வளங்கள் மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் பேணிக் காக்கவும், பசுமையான தமிழ்நாட்டை உருவாக்க அனைவரும் உறுதியேற்போம். இயற்கையைப் பாதுகாப்போம்… வளமான எதிர்காலத்தை உருவாக்குவோம்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
