Close Menu
    What's Hot

    ஓசூர்: கெலவரப்பள்ளி அணைப்பகுதியில் கலக்கும் ரசாயன கழிவு நீர்…. அமைச்சர் கீர்த்தனா  ஆய்வு!

    ட்ரோனில் கொண்டு செல்லப்பட்ட பச்சைத் தேயிலை… சோதனை முயற்சி வெற்றி

    மெட்ரோ ரயில் பணிகள்: சென்னை நந்தனம், கத்திப்பாராவில் முதல்வர் விஜய் நேரில் ஆய்வு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவு… மத்திய அரசு மீது சந்தேகம்  கிளப்பும் அண்ணாமலை!
    Featured

    காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவு… மத்திய அரசு மீது சந்தேகம்  கிளப்பும் அண்ணாமலை!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 28, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    009 annam alai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காவிரி நதி நீர் சிக்கலில் தேர்தலை மனதில் வைத்து கர்நாடகாவுக்கு மத்திய அரசு ஆதரவாகச் செயல்படுகிறதா என வீ த லீடர்ஸ் அமைப்பின் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

    சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, கடந்த 16.02.2018 அன்று, உச்சநீதிமன்றம் வழங்கிய காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பில், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே எந்தவொரு கட்டமைப்பையும் புதிதாக ஏற்படுத்த, காவிரி நதி பாயும் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என நேற்றைய தினம், மாநிலங்களவையில், காவிரி நதி தொடர்பாக, மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் அளித்துள்ள பதில் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாகக் கூறியுள்ளார்.

    கடந்த 05.08.2021 அன்று அன்றைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், அணைக் கட்டுமானத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க, கர்நாடக மாநிலத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி நிபந்தனைக்குட்பட்டது என்றும், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு சட்டத்தின்படி, காவிரி கடைமட்டத்தில் பாயும் மாநிலங்களின், (குறிப்பாக தமிழ்நாட்டின்) ஒப்புதல் இன்றி, நதியின் குறுக்கே அணை உள்ளிட்ட கட்டமைப்புகளை அமைக்க முடியாது என்றும் நாடாளுமன்றத்திலேயே தெளிவாக தெரிவித்திருந்ததாக அண்ணாமலை தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த நிலையில், தமிழ்நாட்டு விவசாயிகளின் உரிமைகளையும், நலன்களையும் புறக்கணித்து, மத்திய அரசு தனது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து திடீரென பின்வாங்கியிருப்பது, கர்நாடகத் தேர்தல் அரசியலுக்காகவா என்னும் சந்தேகத்தை எழுப்புவதாக அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார்.

    விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இத்தகைய முக்கியமான விவகாரங்களில், மத்திய அரசு, நேர்மையாகவும், வெளிப்படையாகவும், ஒரே நிலைப்பாட்டிலும் செயல்பட வேண்டும் என எதிர்பார்ப்பது தவறா? என வினா எழுப்பியுள்ள அண்ணாமலை,

    தமிழ்நாட்டு மக்களை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு சகோதர மாநிலங்களுக்கிடையேயான நல்லுறவை பாதிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவிரி விவகாரத்தில் சட்டத்திற்கும் நீதிக்கும் உட்பட்டு செயல்படுமாறு, மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

     

    ஏற்கனவே கல்வி விஷயத்திலும் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்த அண்ணாமலை காவிரி நீர் விவகாரத்திலும் மத்திய பாஜக அரசுக்கு தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

    Annamalai Cauvery Water Dispute Central Government karnataka Tamil Nadu Politics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇடுக்கு பிள்ளையார் கோயிலுக்கு போறீங்களா? இனி முதலில் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டுமாம்..!!
    Next Article மாணவர்கள் மீது தாக்குதல் விவகாரம்!. எதிர்க்கட்சிகள் தொடர் அமளி!. முடங்கிய நாடாளுமன்றம்!
    Editor TN Talks

    Related Posts

    ஓசூர்: கெலவரப்பள்ளி அணைப்பகுதியில் கலக்கும் ரசாயன கழிவு நீர்…. அமைச்சர் கீர்த்தனா  ஆய்வு!

    July 29, 2026

    ட்ரோனில் கொண்டு செல்லப்பட்ட பச்சைத் தேயிலை… சோதனை முயற்சி வெற்றி

    July 29, 2026

    மெட்ரோ ரயில் பணிகள்: சென்னை நந்தனம், கத்திப்பாராவில் முதல்வர் விஜய் நேரில் ஆய்வு!

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஓசூர்: கெலவரப்பள்ளி அணைப்பகுதியில் கலக்கும் ரசாயன கழிவு நீர்…. அமைச்சர் கீர்த்தனா  ஆய்வு!

    ட்ரோனில் கொண்டு செல்லப்பட்ட பச்சைத் தேயிலை… சோதனை முயற்சி வெற்றி

    மெட்ரோ ரயில் பணிகள்: சென்னை நந்தனம், கத்திப்பாராவில் முதல்வர் விஜய் நேரில் ஆய்வு!

    சன் நெட்வொர்க்குக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்… ஏன் தெரியுமா?

    திமுகவுடன் இணைந்து போராட தயார் – பச்சைக் கொடி காட்டும் செங்கொடி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.