Close Menu
    What's Hot

    தமிழ்த்தாய் வாழ்த்துக்கு புதிய சட்டம்… முதலமைச்சருக்கு சிபிஎம் வலியுறுத்தல்

    பழனி நில முறைகேடு!. அதிமுக ஐ.டி. விங் நிர்வாகி இந்திராணிக்கு முன்ஜாமீன்!. உயர்நீதிமன்றம் அதிரடி!

    கேரளாவில் நீட் போராட்ட வழக்குகள்..!! முதல்வர் சதீசனுக்கு பினராயி விஜயன் கடிதம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»நாமக்கல் கோயிலில் விடிய விடிய கறிவிருந்து… 225 ஆடுகள், 3000 கிலோ மட்டன் விருந்து!
    Featured

    நாமக்கல் கோயிலில் விடிய விடிய கறிவிருந்து… 225 ஆடுகள், 3000 கிலோ மட்டன் விருந்து!

    editor5By editor5July 28, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 31 16
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மலையாம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பொங்களாயி அம்மன் கோயில் திருவிழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. மலையாள தெய்வமான இந்த அம்மனுக்கு ஆடி மாதத்தில் நடைபெறும் இந்த விழாவில் பெண்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டு, ஆண்கள் மட்டுமே அனைத்து சடங்குகளையும் நிறைவேற்றினர். இந்த அரிய வழிபாட்டு முறை இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ஆலமரத்தடியில் அமைந்துள்ள இந்த கோயிலில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மரபு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கோயில் பூஜை, கிடா வெட்டு, பொங்கல் சமைத்தல், சமபந்தி விருந்து உள்ளிட்ட அனைத்து பணிகளையும் ஆண்களே முழுமையாகக் கையாண்டனர். கோயில் பொருட்களைக்கூட பெண்கள் தொட அனுமதி இல்லை. கோயில் வளாகத்திலும் பெண்களுக்கு நுழைவு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கத்துக்கான காரணம் 200 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு சோக சம்பவம். கெடமலையில் வசித்த பொங்களாயி என்ற நிறைமாத கர்ப்பிணி பெண், அடைமழையில் பிரசவ வலியால் தவித்தபோது யாரும் உதவ வராததால், அரச மரத்தடியில் பிரசவித்தார். இரு ஆண் குழந்தைகள் பிறந்தும் இறந்தன. உதவி கிடைக்காத கோபத்தில், “குழந்தை பாக்கியம் இல்லாமல், பசியால் தவிக்கட்டும்” என சாபமிட்டுவிட்டு மலையேறினார். அதன்பின் கிராமத்தில் குழந்தை பிறப்பு பெருமளவில் குறைந்தது.

    பின்னர் கொல்லிமலையிலிருந்து வந்த ஒரு மலைவாழ் பாட்டி மூலம் சாபத்தின் விவரம் தெரியவந்தது. அவரது அறிவுரையின்படி, பொங்களாயியை அம்மனாக வழிபட்டு, ஆண்கள் மட்டும் பூஜை செய்யத் தொடங்கியதும் குழந்தை சத்தம் கேட்கத் தொடங்கியது. அதன்பின் ஆடி திருவிழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருமணத் தடைகள் நீங்கி நன்மைகள் பிறக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர்.

    இந்த ஆண்டு விழா இரவு சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. கணபதி மற்றும் அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது. நள்ளிரவில் ஒரு பெண் ஆடு பலியிடப்பட்டதைத் தொடர்ந்து, பக்தர்கள் கொண்டு வந்த 225 ஆட்டுக்கிடாக்கள் வெட்டப்பட்டன. சுமார் 3,000 கிலோவுக்கும் மேற்பட்ட ஆட்டுக்கறி சமைக்கப்பட்டது. 500 கிலோவுக்கு மேல் அரிசியில் சுடச்சுட பொங்கல் தயாரிக்கப்பட்டது.

    நேற்று காலை 6 மணிக்கு தொடங்கிய சமபந்தி கறிவிருந்து இன்று மதியம் 12.30 மணி வரை நீடித்தது. நாமக்கல் மட்டுமின்றி சேலம், கரூர், திருச்சி, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 10,000க்கும் மேற்பட்ட ஆண்கள் பங்கேற்றனர். நீண்ட வரிசையில் நின்று அனைவரும் உற்சாகமாக விருந்துண்டனர். இந்த தனித்துவமான ஆண்கள் மட்டுமேயான வழிபாடு மற்றும் பிரம்மாண்ட விருந்து சுற்றுவட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    kari virundhu namakkal
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜப்பானில் 7.1 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!. சுனாமி எச்சரிக்கை; மக்கள் பீதி!
    Next Article சேலம் : சிறுத்தை பட பாணியில் மொட்டை அடிக்க வைத்த ஆசாமி..! ரூ.15,000 வரும் என நம்பி பெண்கள் ஏமாற்றம்..!
    editor5

    Related Posts

    தமிழ்த்தாய் வாழ்த்துக்கு புதிய சட்டம்… முதலமைச்சருக்கு சிபிஎம் வலியுறுத்தல்

    July 28, 2026

    பழனி நில முறைகேடு!. அதிமுக ஐ.டி. விங் நிர்வாகி இந்திராணிக்கு முன்ஜாமீன்!. உயர்நீதிமன்றம் அதிரடி!

    July 28, 2026

    கேரளாவில் நீட் போராட்ட வழக்குகள்..!! முதல்வர் சதீசனுக்கு பினராயி விஜயன் கடிதம்..!!

    July 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழ்த்தாய் வாழ்த்துக்கு புதிய சட்டம்… முதலமைச்சருக்கு சிபிஎம் வலியுறுத்தல்

    பழனி நில முறைகேடு!. அதிமுக ஐ.டி. விங் நிர்வாகி இந்திராணிக்கு முன்ஜாமீன்!. உயர்நீதிமன்றம் அதிரடி!

    கேரளாவில் நீட் போராட்ட வழக்குகள்..!! முதல்வர் சதீசனுக்கு பினராயி விஜயன் கடிதம்..!!

    ஓயாத உக்ரைன்-ரஷியா போர்..!! 1,612வது நாளில் டிரம்ப் உடன் ஜெலன்ஸ்கி இன்று சந்திப்பு..!!

    சி.எம். பற்றி பேசினால் வழக்கு… சீமான் குறித்து பேசினால் வழக்கில்லையா? யூ டியூப்பர் பிஸ்மி மீது வழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.