தவெக எம்.எல்.ஏ.விடம் குதிரை பேரம் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க, 35 கோடி ரூபாய் சன்மானம் தருவதாக தன்னிடம் சிலர் பேரம் பேசியதாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. இளையராஜா, சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த திருவல்லிக்கேணி போலீசார், இந்த வழக்கு தொடர்பாக 14 பேரை கைது செய்துள்ளனர்.
இவர்களில், கார்த்திக் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் தங்களுக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், மறு உத்தரவு வரும் வரை திருவல்லிக்கேணி போலீசார் முன்பு தினமும் காலை, மாலை என இருவேளை ஆஜராக வேண்டுமென்று என்ற நிபந்தனையுடன், இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
