Close Menu
    What's Hot

    மேகதாது பிரச்னையில் திமுக அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறது… மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு

    தனுஷின் அரசியல் வருகை.. திமுக, அதிமுகவின் எதிர்காலம் குறித்து பரபரப்பு கணிப்பு!

    மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய நடிகை சிம்ரன்..!  சைக்கிள் வழங்கி நெகிழ்ச்சி..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மனு மட்டும்.. பணம் வேண்டாம்! மானாமதுரை வட்டாட்சியரின் அறிவிப்புக்கு பொதுமக்கள் பாராட்டு!
    Featured

    மனு மட்டும்.. பணம் வேண்டாம்! மானாமதுரை வட்டாட்சியரின் அறிவிப்புக்கு பொதுமக்கள் பாராட்டு!

    editor5By editor5July 28, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 46 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா அலுவலக நுழைவாயிலில் ஒட்டப்பட்டுள்ள ஒரு அறிவிப்புப் பலகை, அண்மையில் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. “தாலுகா அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களுடன் மட்டுமே வர வேண்டும். பணம் வைத்திருப்பவர்களுக்கு உள்ளே அனுமதி கிடையாது” என்ற இந்த நோட்டீஸ், லஞ்சத்தைத் தடுக்கும் நோக்கில் வட்டாட்சியர் கிருஷ்ணகுமாரால் வெளியிடப்பட்டுள்ளது.

    பட்டா மாறுதல், வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், நில அளவை உள்ளிட்ட அன்றாடப் பணிகளுக்காக அலுவலகம் வரும் மக்களிடம் சிலர் லஞ்சம் எதிர்பார்ப்பதும், இடைத்தரகர்கள் நடமாடுவதும் நீண்டகாலமாக புகார்களுக்குக் காரணமாக இருந்தன. இதைக் கட்டுப்படுத்தவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    அறிவிப்பைப் பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சியும் வியப்பும் அடைந்துள்ளனர். சமூக ஆர்வலர்கள் இதை “துணிச்சலான நடவடிக்கை” எனப் பாராட்டியுள்ளனர். அதேநேரம், இது வெறும் கண் துடைப்பாக இல்லாமல் உண்மையில் செயல்படுத்தப்பட்டால் மட்டுமே பயன் உண்டாகும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்த பிறகு, முதல்வர் விஜய் லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக கடும் நிலைபாட்டை வெளிப்படுத்தி வருகிறார். சட்டசபையில் “மக்கள் பணத்தைத் தொட மாட்டோம்; தொட்டவர்களையும் விட மாட்டோம்” என உறுதியளித்த அவர், கரூர் உள்ளிட்ட இடங்களில் “லஞ்சம் கேட்பவர்களிடம் என் பெயரைச் சொல்லுங்கள்” என மக்களை ஊக்குவித்தார்.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை மாநிலம் முழுவதும் தாலுகா அலுவலகங்களில் சோதனைகளைத் தீவிரப்படுத்தியது. சில நாட்களுக்கு முன் 35 தாலுகா அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.13.78 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் அரசு ஊழியர்கள் மத்தியில் “கையில் பணம் வைக்கவும் முடியவில்லை, ஜிபேயில் அனுப்பவும் முடியவில்லை” என்ற புகார்களும் எழுந்தன.

    இத்தகைய சூழலில் மானாமதுரை வட்டாட்சியரின் இந்த நடவடிக்கை, ஆட்சியின் லஞ்ச எதிர்ப்புக் கொள்கையை களத்தில் செயல்படுத்தும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. சாமானிய மக்கள் மத்தியில் அரசு நிர்வாகம் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் அமைந்திருப்பதாகவும் கருதப்படுகிறது. இந்த அறிவிப்பின் புகைப்படம் சமூக ஊடகங்களில் விரைவாகப் பரவி டிரெண்ட் ஆகியுள்ளது.

    manamadurai vattatchiyar
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticlePF பணம் பெற இனி UPI போதும்..!! ஆகஸ்டில் வரவிருக்கும் புதிய மாற்றம்!
    Next Article சிவகாசி: காகித ஆலையில் பயங்கர தீ … பல கோடி ரூபாய் காகித பண்டல்கள் சேதம்!
    editor5

    Related Posts

    மேகதாது பிரச்னையில் திமுக அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறது… மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு

    July 29, 2026

    தனுஷின் அரசியல் வருகை.. திமுக, அதிமுகவின் எதிர்காலம் குறித்து பரபரப்பு கணிப்பு!

    July 29, 2026

    மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய நடிகை சிம்ரன்..!  சைக்கிள் வழங்கி நெகிழ்ச்சி..!

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மேகதாது பிரச்னையில் திமுக அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறது… மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு

    தனுஷின் அரசியல் வருகை.. திமுக, அதிமுகவின் எதிர்காலம் குறித்து பரபரப்பு கணிப்பு!

    மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய நடிகை சிம்ரன்..!  சைக்கிள் வழங்கி நெகிழ்ச்சி..!

    மதுக்கடைகள் தனியார் மயம்… அன்புமணி எதிர்ப்பு… மதுக்கடைகளை மூடுவது தான் முழுமையான தீர்வு!

    சென்னை : குறைவான உறுப்பினர்களுடன் கூடிய மாமன்றக் கூட்டம்..! திமுக அஞ்சாமல் மக்கள் பணிகள் தொடரும்..! மேயர் பிரியா உரை..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.