Close Menu
    What's Hot

    கர்நாடகாவில் அனைத்து கல்லூரிகளிலும் எச்.ஐ.வி. பரிசோதனை, ஆலோசனை முகாம்களுக்கு அரசு உத்தரவு

    “பிரகாஷ்ராஜ் அரபிக்கடலில் மீன்களுக்கு இரையாவார்” – பா.ஜ.க. எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

    மக்களவையில் தேர்வு முறைகேடு தடுப்பு மசோதா நிறைவேற்றம்: வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»இயற்கை விவசாயத்துக்கு புத்துயிர்: புதுக்கோட்டையில் களைகட்டிய விவசாயிகள் மாநாடு
    Featured

    இயற்கை விவசாயத்துக்கு புத்துயிர்: புதுக்கோட்டையில் களைகட்டிய விவசாயிகள் மாநாடு

    Editor web2By Editor web2July 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2026 07 29 18h48m08s530
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    புதுக்கோட்டை மாவட்டம், அண்டக்குளம் அருகே உள்ள ஒடுகம்பட்டி குடும்பம் கொழிஞ்சி உயிர்ச்சூழல் பண்ணை மற்றும் பயிற்சி மையத்தில் இயற்கை விவசாயிகள் மாநாடு–2026 இன்று உற்சாகமாக நடைபெற்றது.

    இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள், பெண் விவசாயிகள் மற்றும் இயற்கை விவசாய ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

    vlcsnap 2026 07 29 18h47m40s520

    இயற்கை விவசாயத்தின் அவசியம், அதன் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள், மண் வளத்தை பாதுகாக்கும் முறைகள் மற்றும் பாரம்பரிய விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து நிபுணர்கள் விரிவாக விளக்கமளித்தனர். அன்றாட வாழ்வில் ஏற்படும் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு மூலிகைச் செடிகளின் பயன்பாடு, இயற்கை மருத்துவத்தின் சிறப்புகள் மற்றும் அடுத்த தலைமுறைக்கான பாதுகாப்பான உணவு உற்பத்தியின் அவசியம் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

    மாநாட்டில் வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரக்கன்றுகள் நடுவதன் அவசியம், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் மரவகைகள் மற்றும் அவற்றை நடுவதற்கான சரியான இடங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    vlcsnap 2026 07 29 18h47m50s225

    மேலும், பாரம்பரிய நெல் விதைகள், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட குளியல் சோப், நாட்டுச் சர்க்கரை, அவல், கறிவேப்பிலை பொடி, செம்பருத்தி தேநீர், மஞ்சள் தூள் உள்ளிட்ட இயற்கை பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்றன. கடந்த ஆண்டு இயற்கை விவசாயத்தில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    மாநாட்டில் பங்கேற்ற விவசாயிகளுக்கு மதிய உணவு, மரக்கன்றுகள் வழங்கப்பட்டதுடன், இயற்கை விவசாயம் மேற்கொள்ள விரும்புவோருக்கு வங்கிகள் மூலம் கடன் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    Nammalvar NaturalFarming OrganicAgriculture pudukkottai
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிருது விழா: புதுச்சேரி வருகிறார் அமித்ஷா… ஏற்பாடுகள் தீவிரம்!
    Next Article ரயிலில் பயணித்து போரூர்–பூந்தமல்லி மெட்ரோ பாதையை ஆய்வு செய்த முதல்வர் விஜய்!
    Editor web2
    • Website

    Related Posts

    கர்நாடகாவில் அனைத்து கல்லூரிகளிலும் எச்.ஐ.வி. பரிசோதனை, ஆலோசனை முகாம்களுக்கு அரசு உத்தரவு

    July 29, 2026

    “பிரகாஷ்ராஜ் அரபிக்கடலில் மீன்களுக்கு இரையாவார்” – பா.ஜ.க. எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

    July 29, 2026

    மக்களவையில் தேர்வு முறைகேடு தடுப்பு மசோதா நிறைவேற்றம்: வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கர்நாடகாவில் அனைத்து கல்லூரிகளிலும் எச்.ஐ.வி. பரிசோதனை, ஆலோசனை முகாம்களுக்கு அரசு உத்தரவு

    “பிரகாஷ்ராஜ் அரபிக்கடலில் மீன்களுக்கு இரையாவார்” – பா.ஜ.க. எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

    மக்களவையில் தேர்வு முறைகேடு தடுப்பு மசோதா நிறைவேற்றம்: வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை

    ரயிலில் பயணித்து போரூர்–பூந்தமல்லி மெட்ரோ பாதையை ஆய்வு செய்த முதல்வர் விஜய்!

    இயற்கை விவசாயத்துக்கு புத்துயிர்: புதுக்கோட்டையில் களைகட்டிய விவசாயிகள் மாநாடு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.