Close Menu
    What's Hot

    தீவிரமடையும் காவிரி சர்ச்சை.. பந்த் மூலம் போராட்டத்தை அறிவிக்கும் கர்நாடகா.. பெங்களூரில் பரபரப்பு!

    12 வயது சிறுவன் கார் விபத்தில் உயிரிழப்பு; தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை!

    வெள்ளபாதிப்பு; அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சபரிமலை நெய் வினியோகத்தில் ரூ.85 லட்சம் முறைகேடு? விசாரணைக்கு கேரள அரசு உத்தரவு!!
    Featured

    சபரிமலை நெய் வினியோகத்தில் ரூ.85 லட்சம் முறைகேடு? விசாரணைக்கு கேரள அரசு உத்தரவு!!

    editor5By editor5July 30, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 37
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உலகப் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு நெய் வினியோகம் செய்யும் பணியில் பெரும் முறைகேடு நடைபெற்றுள்ளது. கேரள அரசின் பால்வள மேம்பாட்டு நிறுவனமான மில்மா மூலம் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்ட நெய்யில் பெரும் அளவு கலப்படம் செய்யப்பட்டு, தரம் குறைந்த நெய் சபரிமலைக்கு அனுப்பப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த மோசடியால் சுமார் ரூ.85.73 லட்சம் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தனியார் நிறுவனங்கள் மூலம் சபரிமலைக்கு நெய் வினியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், தரம் குறைந்த மற்றும் கலப்படம் செய்யப்பட்ட நெய் வழங்கப்படுவதாக பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து தொடர் புகார்கள் எழுந்தன.

    இதையடுத்து கேரள அரசு, நம்பகமான அரசு நிறுவனமான மில்மாவிடம் (MILMA) நெய் வாங்க முடிவு செய்தது. அதன்படி, கடந்த சீசனில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள மில்மாவின் உற்பத்தி மையத்தில் இருந்து 1,77,666 லிட்டர் நெய் சபரிமலைக்கு அனுப்பப்பட்டது. ஆனால், மீண்டும் தரம் குறைந்த நெய் வினியோகம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததால், பால்வள மேம்பாட்டு கழக இயக்குநர் சாலினி கோபிநாத் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.

    விசாரணையில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகின. மில்மா உற்பத்தி செய்த உயர்தர நெய்யைப் பயன்படுத்தாமல், வழியில் மற்ற மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தரம் குறைந்த, கலப்படம் நிறைந்த நெய்யை மில்மா டின்களில் அடைத்து சபரிமலைக்கு அனுப்பியுள்ளனர். உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இந்த நெய்களை சோதனை செய்யாமல் அனுமதித்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும், இந்த முறைகேட்டில் மூத்த அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இந்த மோசடி மூலம் ரூ.85.73 லட்சம் அளவுக்கு நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    சபரிமலை போன்ற புனித தலத்துக்கு அளிக்கப்படும் பிரசாதப் பொருட்களில் இத்தகைய மோசடி நடைபெற்றிருப்பது பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விசாரணை முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் மில்மா போன்ற அரசு நிறுவனங்களின் நம்பகத்தன்மையையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

    ghee scam sabarimala
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉயிருக்குப் போராடிய அரிய வகை ‘அரிவாள் மூக்கன்’!. தண்ணீர் கொடுத்து உதவிய இளைஞர்கள்!
    Next Article கோயில்களில் இனி ஆன்லைன் டெண்டர் முறை, டிஜிட்டல் பில்லிங் அறிமுகம்!. அமைச்சர் ரமேஷ் அதிரடி!
    editor5

    Related Posts

    தீவிரமடையும் காவிரி சர்ச்சை.. பந்த் மூலம் போராட்டத்தை அறிவிக்கும் கர்நாடகா.. பெங்களூரில் பரபரப்பு!

    July 30, 2026

    12 வயது சிறுவன் கார் விபத்தில் உயிரிழப்பு; தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை!

    July 30, 2026

    வெள்ளபாதிப்பு; அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

    July 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தீவிரமடையும் காவிரி சர்ச்சை.. பந்த் மூலம் போராட்டத்தை அறிவிக்கும் கர்நாடகா.. பெங்களூரில் பரபரப்பு!

    12 வயது சிறுவன் கார் விபத்தில் உயிரிழப்பு; தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை!

    வெள்ளபாதிப்பு; அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

    வினாத்தாள் கசிவு விவகாரம்… அபராதம், கடும் தண்டனை மட்டுமே தீர்வல்ல – மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்

    சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் அப்ரெண்டீஸ் பணியிடம்: ஆக. 28 வரை விண்ணப்பிக்கலாம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.