Close Menu
    What's Hot

    நாகை : படகு பழுதால் 2 நாட்களாக கடலில் தத்தளித்த மீனவர்கள்..! பத்திரமாக மீட்ட சக மீனவர்கள்..!

    தவெக அரசுக்கு முதல்வர் என்றாலே ஸ்டாலின் தான் நியாபகம் வருகிறார் போல..! முன்னாள் அமைச்சர் சிவசங்கர் பேட்டி..!

    காவி நிறத்திற்கு மாறும் இந்திய ஹாக்கி சீருடை… “விளையாட்டுத் துறையிலும் அரசியலா..?”

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தனியார் பள்ளி கட்டண கண்காணிப்புக்கு சிறப்பு குழு – அமைச்சர் ராஜ்மோகன்
    Featured

    தனியார் பள்ளி கட்டண கண்காணிப்புக்கு சிறப்பு குழு – அமைச்சர் ராஜ்மோகன்

    Editor web2By Editor web2July 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    CBSE students
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.

    கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக உயர்ந்துள்ளதாகவும், குறிப்பாக தொடக்கக் கல்வியில் பெற்றோர் அரசு பள்ளிகளை அதிகம் விரும்பி தேர்வு செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

    “அரசுப் பள்ளிகள் எங்கள் கண்கள். அந்தக் கண்களுக்கு புதிய வெளிச்சம் கிடைத்திருக்கிறது. கல்வித் தரம் உயர்ந்ததன் காரணமாகவே மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    மாணவர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தும் வகையில், ஆறாம் வகுப்பு முதலே கணினி அறிவியல் பாடப்புத்தகத்தை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கணினி அறிவியல் பயிற்றுநர்கள் தொடர்பான திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

    008 rajmohan

    தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்களை வெளிப்படையாகக் கண்காணிக்கும் நோக்கில், ஓய்வு பெற்ற நீதிபதி மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட உள்ளது. அந்தக் குழு பள்ளிக் கட்டண நடைமுறைகளை ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைகள் வழங்கும்.

    மேலும், பள்ளிகளின் சுற்றுப்புறத்தை தூய்மையாகவும், கற்றலுக்கு உகந்த சூழலாகவும் பராமரிக்க பள்ளி அலுவலகங்களுக்கு வழங்கப்படும் நிதியை அதிகரிக்க முதலமைச்சர் விஜயிடம் அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மேலும் தெரிவித்தார்.

    முதலமைச்சர் விஜயின் கர்நாடக பயணம் குறித்த கேள்விக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து மட்டுமே வெளியாகும் என்றும், அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் ராஜ்மோகன் தெரிவித்தார். ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், அதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களே கருத்து தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    PrivateSchoolFees rajmohan SchoolEducation tamilnadu
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசுங்குவார்சத்திரம்; சிண்டெக்ஸ் டேங்காவது வையுங்க சார்… குடிநீர் பிரச்சினை… அமைச்சரிடம் முறையிட்ட பெண்கள்
    Next Article திமுகவில் வரலாற்று மாற்றம்.. 15 ஆண்டுகளை மனதில் வைத்து ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு!
    Editor web2
    • Website

    Related Posts

    நாகை : படகு பழுதால் 2 நாட்களாக கடலில் தத்தளித்த மீனவர்கள்..! பத்திரமாக மீட்ட சக மீனவர்கள்..!

    July 31, 2026

    தவெக அரசுக்கு முதல்வர் என்றாலே ஸ்டாலின் தான் நியாபகம் வருகிறார் போல..! முன்னாள் அமைச்சர் சிவசங்கர் பேட்டி..!

    July 31, 2026

    காவி நிறத்திற்கு மாறும் இந்திய ஹாக்கி சீருடை… “விளையாட்டுத் துறையிலும் அரசியலா..?”

    July 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நாகை : படகு பழுதால் 2 நாட்களாக கடலில் தத்தளித்த மீனவர்கள்..! பத்திரமாக மீட்ட சக மீனவர்கள்..!

    தவெக அரசுக்கு முதல்வர் என்றாலே ஸ்டாலின் தான் நியாபகம் வருகிறார் போல..! முன்னாள் அமைச்சர் சிவசங்கர் பேட்டி..!

    காவி நிறத்திற்கு மாறும் இந்திய ஹாக்கி சீருடை… “விளையாட்டுத் துறையிலும் அரசியலா..?”

    விஜய்யின் வெள்ளிக்கிழமை ரகசியம்.. பட்டு வேஷ்டி, சட்டைக்கு பின்னால் இருக்கும் சென்டிமென்ட்!

    பாக்.-ல் நிலக்கரி சுரங்க வெடி விபத்து.. எகிறும் பலி எண்ணிக்கை! மீட்புப்பணி தீவிரம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.