Close Menu
    What's Hot

    திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

    ‘வந்தே மாதரம்’ மசோதா மக்களவையிலும் நிறைவேற்றம்: நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் ஒப்புதல்!

    “மேகதாது அணைக்கு எதிராக ராகுல் காந்தி பேசத் தயாரா?” – அன்புமணி சவால்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஆரணி விழா: முன்னாள் ராணுவ வீரரை சரமாரியாக தாக்கிய போலீசார்… வைரலாகும் அதிர்ச்சி CCTV காட்சி!
    Featured

    ஆரணி விழா: முன்னாள் ராணுவ வீரரை சரமாரியாக தாக்கிய போலீசார்… வைரலாகும் அதிர்ச்சி CCTV காட்சி!

    Editor web2By Editor web2July 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Police attack
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நடைபெற்ற கோவில் திருவிழாவில் முன்னாள் ராணுவ வீரரை போலீசார் தாக்கியதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆரணி அருகே அர்ஜுனாபுரம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஆடல், பாடல் நிகழ்ச்சியில் கண்ணமங்கலம் காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது துருகம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ரமேஷ்பாபு மற்றும் தற்போது ராணுவத்தில் பணியாற்றி வரும் பிரபாகரன் ஆகியோர் நடனமாடியதாகக் கூறப்படுகிறது.

    vlcsnap 2026 07 30 15h45m42s564

    இதையடுத்து, போலீசாருக்கும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் தலைமை காவலர் சபரி, சிறப்பு உதவி ஆய்வாளர் திருமால் உள்ளிட்ட போலீசார் ரமேஷ்பாபுவை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்த சம்பவத்திற்குப் பிறகு, காவல்துறையினரை தாக்கியதாக தலைமை காவலர் சபரி அளித்த புகாரின் பேரில், ரமேஷ்பாபு மற்றும் பிரபாகரன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    vlcsnap 2026 07 30 15h45m53s512

    இந்நிலையில், போலீசார் முன்னாள் ராணுவ வீரரை தாக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சம்பவம் நடந்த 10 நாட்களுக்குப் பிறகு வெளியான இந்த காட்சிகள் குறித்து முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் போலீசார் தாக்கிவிட்டு, அவர்கள் மீதே வழக்குப் பதிவு செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கத்தினரும் பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.

    Arani ExServiceman TamilNaduPolice ViralVideo
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாவல் துறை, கல்வித் துறை, போக்குவரத்து துறையும் தனியார் மயமாகுமா? – முதலமைச்சர் விஜய்க்கு, ஆர்.பி.உதயகுமார் கேள்வி.
    Next Article இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளரானார் ஸ்டீபன் ஃப்ளெமிங்… மீண்டும் கேப்டன் ஆனார் ஜோ ரூட்!
    Editor web2
    • Website

    Related Posts

    திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

    July 30, 2026

    ‘வந்தே மாதரம்’ மசோதா மக்களவையிலும் நிறைவேற்றம்: நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் ஒப்புதல்!

    July 30, 2026

    “மேகதாது அணைக்கு எதிராக ராகுல் காந்தி பேசத் தயாரா?” – அன்புமணி சவால்

    July 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

    ‘வந்தே மாதரம்’ மசோதா மக்களவையிலும் நிறைவேற்றம்: நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் ஒப்புதல்!

    “மேகதாது அணைக்கு எதிராக ராகுல் காந்தி பேசத் தயாரா?” – அன்புமணி சவால்

    3-வது இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து! மாநில பாடலின் முன்னுரிமையைப் பறிக்கும் முயற்சிக்கு கனிமொழி எம்.பி. கண்டனம்!

    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.