Close Menu
    What's Hot

    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

    தாமிரபரணி ஆற்றில் ஆடைகள், சடங்கு பொருட்கள் வீசத் தடை: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

    வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் அறநிலையத் துறை தகவல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மேகதாது விவகாரம்: தமிழக சட்டப்பேரவை தீர்மானத் திருத்தத்துக்கு எதிரான வழக்கு…   2 வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
    Featured

    மேகதாது விவகாரம்: தமிழக சட்டப்பேரவை தீர்மானத் திருத்தத்துக்கு எதிரான வழக்கு…   2 வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

    Editor TN TalksBy Editor TN TalksJuly 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    029 mega thatghu
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டம் தொடர்பாக, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் செய்யப்பட்ட திருத்தத்தை ரத்து செய்யக் கோரி அதிமுக தாக்கல் செய்த மனுவுக்கு, தமிழக தலைமைச் செயலாளர், சட்டப்பேரவை செயலாளர் மற்றும் மத்திய ஜல் சக்தி அமைச்சகம் ஆகியோர் இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கடந்த ஜூன் 19-ஆம் தேதி, கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது, மேகதாது விவகாரத்தை விசாரிக்க தனி தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்ற திருத்தமும் சேர்க்கப்பட்டது.

    இந்தத் திருத்தத்திற்கு அதிமுக, பாமக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) ஆகியவை எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    அந்த மனுவில், ஜூன் 18-ஆம் தேதி எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்பட்ட தீர்மான நகலில் இந்தத் திருத்தம் இடம்பெறவில்லை என்றும், எந்த விவாதமும் இல்லாமல் அது நிறைவேற்றப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், திருத்தம் ஒருமனதாக நிறைவேறாத நிலையிலும், அது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாகக் கூறி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    இந்த மனுவை தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையின் முடிவில், தமிழக தலைமைச் செயலாளர், சட்டப்பேரவை செயலாளர் மற்றும் மத்திய ஜல் சக்தி அமைச்சகம் ஆகியோர் இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

    Cauvery Water Dispute Madras High Court Mekedatu Dam Tamil Nadu Assembly Tamil Nadu Politics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து பிரேசில் வீரர் நெய்மர் ஓய்வு!
    Next Article சேலம் கல்லூரி பின்புறம் கள்ளச்சாராயம் காய்ச்சிய நெசவு தொழிலாளி கைது!. 200 லிட்டர் ஊறல் அழிப்பு!
    Editor TN Talks

    Related Posts

    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

    July 30, 2026

    தாமிரபரணி ஆற்றில் ஆடைகள், சடங்கு பொருட்கள் வீசத் தடை: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

    July 30, 2026

    வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் அறநிலையத் துறை தகவல்

    July 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

    தாமிரபரணி ஆற்றில் ஆடைகள், சடங்கு பொருட்கள் வீசத் தடை: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

    வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் அறநிலையத் துறை தகவல்

    என் வாழ்நாள் முழுவதும் மகனின் நலனுக்காக துணை நிற்பேன்!. மாதம்பட்டி ரங்கராஜ் நெகிழ்ச்சி!

    சென்னை ஐஐடி இயக்குநருக்கு எதிரான விமர்சனம்: பிரியங்கா காந்திக்கு 215 கல்வியாளர்கள் எதிர்ப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.