Close Menu
    What's Hot

    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

    தாமிரபரணி ஆற்றில் ஆடைகள், சடங்கு பொருட்கள் வீசத் தடை: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

    வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் அறநிலையத் துறை தகவல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»மெட்டாலிக் பெலட் துப்பாக்கி பயன்பாட்டுக்கு தடை கோரிய மனு:  திருத்தம் கோரிய உச்ச நீதிமன்றம்
    இந்தியா

    மெட்டாலிக் பெலட் துப்பாக்கி பயன்பாட்டுக்கு தடை கோரிய மனு:  திருத்தம் கோரிய உச்ச நீதிமன்றம்

    Editor web2By Editor web2July 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Pellet Gun
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    போராட்டக்காரர்களை கலைக்க மெட்டாலிக் பெலட் (Metallic Pellet) துப்பாக்கிகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, காவல்துறை விதிமுறைகளையே நேரடியாக சவால் செய்யும் வகையில் திருத்தி தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் மனுதாரர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

    முன்னாள் உளவுத்துறை (IB) சிறப்பு இயக்குநர் யசோவர்தன் ஆசாத் மற்றும் ஜூலை 20-ஆம் தேதி நடைபெற்ற ‘சன்சத் சலோ’ மாணவர் போராட்டத்தில் காயமடைந்த இருவர் தாக்கல் செய்த மனுவை, தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

    விசாரணையின் போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விருந்தா குரோவர், அமைதியான மாணவர் போராட்டத்தின் மீது ரேபிட் ஆக்ஷன் ஃபோர்ஸ் (RAF) மெட்டாலிக் பெலட் குண்டுகளை பயன்படுத்தியதாகவும், இரு மனுதாரர்களின் உடலில் இருந்து அந்த பெலட்டுகள் அகற்றப்பட்டதாகவும் தெரிவித்தார். ரப்பர் அல்லது பிளாஸ்டிக் பெலட்டுகள் அல்ல, மெட்டாலிக் பெலட்டுகள்தான் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் வாதிட்டார்.

    இதற்கு பதிலளித்த நீதிபதிகள், சில விசேஷ சூழல்களில் காவல்துறை விதிமுறைகள் பெலட் துப்பாக்கி பயன்படுத்த அனுமதிப்பதாகக் குறிப்பிட்டனர். அந்த விதிமுறைகளை சவால் செய்யாமல் முழுமையான தடை கோருவது தெளிவற்ற கோரிக்கையாக இருப்பதாகவும், மனுவை அதற்கேற்ப திருத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

    அதேவேளையில், மாணவர்களின் அமைதியான போராட்டங்களுக்கு வன்முறையால் பதிலளிக்கக் கூடாது என்றும், சட்டம்-ஒழுங்கு சூழ்நிலைக்கு ஏற்ப அளவான (Graded Response) நடவடிக்கைகளே காவல்துறையால் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது.

    மேலும், ஜூலை 20 போராட்டத்தில் காயமடைந்த மனுதாரர்கள் மற்றும் இதேபோன்ற சூழலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சையை டெல்லி அரசு வழங்க வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. போராட்ட நாளில் ரேபிட் ஆக்ஷன் ஃபோர்ஸ் பயன்படுத்திய ஆயுதங்கள், வெடிமருந்து பதிவேடுகள் மற்றும் பணிப்பதிவுகளை பாதுகாத்து வைக்குமாறும் மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

    IndiaNews PelletGuns StudentProtests supremecourt
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅரசு நிர்வாகங்களில் AI தொழில் நுட்பம்…. பாதுகாப்பாக செயல்படுத்த எடுத்துள்ள நடவடிக்கை என்ன?  மத்திய அரசுக்கு தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி!
    Next Article பெலட் துப்பாக்கி பயன்பாடு: தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
    Editor web2
    • Website

    Related Posts

    சென்னை ஐஐடி இயக்குநருக்கு எதிரான விமர்சனம்: பிரியங்கா காந்திக்கு 215 கல்வியாளர்கள் எதிர்ப்பு!

    July 30, 2026

    போராட்டங்களுக்கு வெளிநாட்டு நிதி வருகிறதா? மத்திய அரசுக்கு அபிஜித் திப்கே சவால்!

    July 30, 2026

    ஜந்தர் மந்தர் போராட்டம்: சிஜேபி கட்சியினர் மீதான வழக்குகள் ரத்து – டெல்லி அரசு அறிவிப்பு

    July 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

    தாமிரபரணி ஆற்றில் ஆடைகள், சடங்கு பொருட்கள் வீசத் தடை: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

    வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் அறநிலையத் துறை தகவல்

    என் வாழ்நாள் முழுவதும் மகனின் நலனுக்காக துணை நிற்பேன்!. மாதம்பட்டி ரங்கராஜ் நெகிழ்ச்சி!

    சென்னை ஐஐடி இயக்குநருக்கு எதிரான விமர்சனம்: பிரியங்கா காந்திக்கு 215 கல்வியாளர்கள் எதிர்ப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.