Close Menu
    What's Hot

    முதல்வர் விஜய்யின் கர்நாடக வருகைக்கு எதிர்ப்பு!. பெங்களூரு விமான நிலையத்தை முற்றுகையிட கன்னட அமைப்புகள் திட்டம்!

    நிலைமை சரியில்ல.. இப்ப வரவேண்டாம் விஜய்..!! கர்நாடக CM டி.கே.சிவக்குமார் கோரிக்கை..!!

    தப்பித்தார் செந்தில் பாலாஜி… முன் ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம் …  பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உத்தரவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»காவல் நிலையத்தில் ஆஜர்: 6 நாட்கள் விலக்கு கோரி செந்தில்பாலாஜி மனு
    Featured

    காவல் நிலையத்தில் ஆஜர்: 6 நாட்கள் விலக்கு கோரி செந்தில்பாலாஜி மனு

    Editor web2By Editor web2July 31, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    senthil balaji karur case
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரம் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு திருவல்லிக்கேணி காவல் நிலைய போலீசார் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தனர்.

    இதையடுத்து, இருவரும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், தினமும் காலை 10.30 மணி மற்றும் மாலை 5.30 மணிக்கு விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் செந்தில்பாலாஜி மற்றும் அசோக்குமாருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

    அதன்படி, இருவரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்து முன்ஜாமீன் பெற்று, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தொடர்ந்து ஆஜராகி கையெழுத்திட்டு வருகின்றனர்.

    இதற்கிடையில், டாஸ்மாக் மதுபான கொள்முதல், வாகன டெண்டர் மற்றும் காலி பாட்டில் சேகரிப்பு ஒப்பந்தங்களில் ரூ.100 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக, செந்தில்பாலாஜி, டாஸ்மாக் முன்னாள் நிர்வாக இயக்குநர் விசாகன் உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது. அந்த வழக்கில் முன்ஜாமீன் கோரிய செந்தில்பாலாஜியின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

    இந்த நிலையில், குதிரை பேர வழக்கில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனையின்படி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடுவதிலிருந்து ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 4 வரை 6 நாட்களுக்கு விலக்கு வழங்கக் கோரி அவர் மீண்டும் உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

    அந்த மனுவில், ஜூலை 25 முதல் நீதிமன்ற நிபந்தனையின்படி தொடர்ந்து ஆஜராகி கையெழுத்திட்டு வருவதாகவும், அனைத்து நிபந்தனைகளையும் முறையாக பின்பற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு தொடர்பாக சட்ட ஆலோசனைகள் மற்றும் வழக்கு தயாரிப்பில் ஈடுபட வேண்டியிருப்பதால், 6 நாட்களுக்கு மட்டும் விலக்கு வழங்க வேண்டும் என்றும், ஆகஸ்ட் 5 முதல் மீண்டும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடத் தயாராக இருப்பதாகவும் உத்தரவாதம் அளித்துள்ளார்.இந்த மனு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

    HorseTradingCase MadrasHighCourt SenthilBalaji TamilNaduPolitics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாவிரி உரிமையை காக்க அனைத்துக் கட்சிக் கூட்டம்: முதல்வருக்கு இபிஎஸ் வலியுறுத்தல்
    Next Article டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை விளம்பர பலகை..!! சென்னை ஐகோர்ட் போட்ட உத்தரவு..!!
    Editor web2
    • Website

    Related Posts

    முதல்வர் விஜய்யின் கர்நாடக வருகைக்கு எதிர்ப்பு!. பெங்களூரு விமான நிலையத்தை முற்றுகையிட கன்னட அமைப்புகள் திட்டம்!

    July 31, 2026

    நிலைமை சரியில்ல.. இப்ப வரவேண்டாம் விஜய்..!! கர்நாடக CM டி.கே.சிவக்குமார் கோரிக்கை..!!

    July 31, 2026

    தப்பித்தார் செந்தில் பாலாஜி… முன் ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம் …  பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உத்தரவு!

    July 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்வர் விஜய்யின் கர்நாடக வருகைக்கு எதிர்ப்பு!. பெங்களூரு விமான நிலையத்தை முற்றுகையிட கன்னட அமைப்புகள் திட்டம்!

    நிலைமை சரியில்ல.. இப்ப வரவேண்டாம் விஜய்..!! கர்நாடக CM டி.கே.சிவக்குமார் கோரிக்கை..!!

    தப்பித்தார் செந்தில் பாலாஜி… முன் ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம் …  பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உத்தரவு!

    நாளை ஆந்திரா, கர்நாடகா செல்கிறார் பிரதமர் மோடி..!! பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு..!!

    நாளை சென்னை வருகிறார் ராகுல் காந்தி..!! மாமல்லபுரம் பயிற்சி முகாமில் பங்கேற்பு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.