Close Menu
    What's Hot

    சுயநல இயக்கம்… காரியப் பூனை… காவிரி விவகாரத்தில் கபட நாடகம்… திமுகவை வெளுத்து வாங்கும் தவெக!

    வெளியானது கார்த்தி நடிப்பில் ‘சர்தார் 2’ டீசர்… செப்டம்பரில் திரைக்கு வருகிறது!

    டிரம்ப்புக்கு பதிலடி… அமெரிக்காவின் எரிசக்தி கட்டமைப்புகளை குறிவைப்போம்… ஈரான் எச்சரிக்கை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»காவிரி பிரச்னைக்கு காரணமே கருணாநிதிதான்… உச்ச நீதிமன்றத்தை அணுகுவதே சட்டரீதியான வழி  – அமைச்சர் நிர்மல் குமார்
    Featured

    காவிரி பிரச்னைக்கு காரணமே கருணாநிதிதான்… உச்ச நீதிமன்றத்தை அணுகுவதே சட்டரீதியான வழி  – அமைச்சர் நிர்மல் குமார்

    Editor TN TalksBy Editor TN TalksAugust 1, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    009 nirmal kumar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கர்நாடக அரசு காவிரி நீரை வழங்க மறுத்து வரும் நிலையில், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட உச்ச நீதிமன்றத்தை அணுகுவதே ஒரே சட்டரீதியான வழிமுறை என்று தமிழக சட்டத்துறை மற்றும் மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

    திருநெல்வேலி மேலப்பாளையத்தில் உள்ள அன்னை ஹாஜிரா மகளிர் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக வந்திருந்த அமைச்சர், வண்ணாரப்பேட்டை அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசினார்.

    காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விரைவில் ஆலோசித்து அறிவிப்பார் என்றும் அவர் கூறினார்.

    மேலும், காவிரி பிரச்சினையில் ஒன்றிய அரசின் சம்பந்தப்பட்ட அமைச்சர் கர்நாடகாவுக்கு ஆதரவாகவும், தமிழகத்திற்கு எதிராகவும் கருத்து தெரிவிப்பதாக குற்றம்சாட்டிய அமைச்சர், அது கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தார்.

    மின்சாரத் துறையில் கள உதவியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாகக் கூறிய அவர், புதிய பணியாளர்களை நியமிக்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில் 343 பேர் மட்டுமே நியமிக்கப்பட்ட நிலையில், தற்போதைய காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

    காவிரி நீர் விவகாரத்தின் பின்னணியை குறிப்பிட்ட அமைச்சர், 1974 மற்றும் 1998-ஆம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட சில முடிவுகளால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் பாதிக்கப்பட்டதாகவும், காவிரி பிரச்சினைக்கு காரணம் கருணாநிதிதான் எனவும்,  2007-ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவதற்காக 2013 வரை உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

    காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையைப் பாதுகாப்பதில் மாநில அரசு உறுதியுடன் செயல்பட்டு வருவதாக அமைச்சர் நிர்மல் குமார் கூறினார்.

    Cauvery Dispute Karunanidhi Nirmal Kumar supreme court Tamil Nadu Politics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇரட்டை சகோதரர்கள்… இரட்டை சகோதரிகள்… இரட்டை பாதிரியார்கள்… கேரளாவில் நடந்த வினோத திருமணம்!
    Next Article ஜோசப் விஜய் அரசுக்கு உத்தரவிடக் கோரி நடிகர் பார்த்திபன் வழக்கு… எதற்காக?
    Editor TN Talks

    Related Posts

    சுயநல இயக்கம்… காரியப் பூனை… காவிரி விவகாரத்தில் கபட நாடகம்… திமுகவை வெளுத்து வாங்கும் தவெக!

    August 1, 2026

    வெளியானது கார்த்தி நடிப்பில் ‘சர்தார் 2’ டீசர்… செப்டம்பரில் திரைக்கு வருகிறது!

    August 1, 2026

    டிரம்ப்புக்கு பதிலடி… அமெரிக்காவின் எரிசக்தி கட்டமைப்புகளை குறிவைப்போம்… ஈரான் எச்சரிக்கை!

    August 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சுயநல இயக்கம்… காரியப் பூனை… காவிரி விவகாரத்தில் கபட நாடகம்… திமுகவை வெளுத்து வாங்கும் தவெக!

    வெளியானது கார்த்தி நடிப்பில் ‘சர்தார் 2’ டீசர்… செப்டம்பரில் திரைக்கு வருகிறது!

    டிரம்ப்புக்கு பதிலடி… அமெரிக்காவின் எரிசக்தி கட்டமைப்புகளை குறிவைப்போம்… ஈரான் எச்சரிக்கை!

    “எனக்கு 15 வயதுதான்… என்னை மன்னித்து விடுங்கள்” – பிரதமரை அவதூறாகப் பேசிய சிறுமியின் மன்னிப்பு

    ’பொதுவெளியில் பட்ஜெட் ஆவணம்… ரகசிய காப்பு பிரமாணம் மீறலாகாதா?’- அதிமுக கேள்வி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.