Close Menu
    What's Hot

    மொராக்கோவில் இருந்து சியூட்டாவுக்குள் ஆயிரக்கணக்கானோர் நுழைவு… உயிரிழப்பு 67 ஆக உயர்வு

    நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும்… மாநில அரசும் பருத்தி கொள்முதல் செய்ய கோரிக்கை!

    2030-க்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு… தொழில் துறை அமைச்சர் மதன் தகவல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சுயநல இயக்கம்… காரியப் பூனை… காவிரி விவகாரத்தில் கபட நாடகம்… திமுகவை வெளுத்து வாங்கும் தவெக!
    Featured

    சுயநல இயக்கம்… காரியப் பூனை… காவிரி விவகாரத்தில் கபட நாடகம்… திமுகவை வெளுத்து வாங்கும் தவெக!

    Editor TN TalksBy Editor TN TalksAugust 1, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    014 tvk vs dmk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காவிரி விவகாரத்தில்  காரியப் பூனையான திமுக கபட நாடகம் ஆடுவதாக தமிழக  வெற்றிக் கழகம் கடுமையாக விமர்சித்துள்ளது.

    தவெக ஐடி விங் எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது…

    விவசாயிகள் நலன்களுக்காகவும் கர்நாடக வாழ் தமிழ்ச் சொந்தங்களுக்காகவும் யோசித்துச் செயல்படுவதுதான் மக்கள் விரும்பும் முதல்வர், நம் வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மனசாட்சி உள்ள மக்களாட்சி.

    திமுக போல சுயநலம் கொண்டு தனி ஆவர்த்தனம் செய்யத் துடிப்பவர் இல்லை, எங்கள் வெற்றித் தலைவர்.

    தொடர்ந்து பல ஆண்டுகளாக ஒன்றிய அரசிடம் பேரம் பேசி, பெற வேண்டிய இலாகாக்களைப் பெற்ற போதெல்லாம் காவிரி விவகாரத்திற்காக ஒரு மந்திரி பதவியையாவது, ஒருநாளாவது உதறி இருக்குமா இந்தத் திமுக?

    அத்தனை ஆண்டுகளில் ஒருமுறையாவது காவிரிப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண முயன்றிருக்குமா இந்தத் திமுக? அப்போதெல்லாம் பதவியில் ஒட்டிக்கொண்டு சுகம் கண்ட சுயநல இயக்கம்தான் இந்தத் திமுக.

    ஆட்சியில் இருக்கும்போது சத்தம் போடுவதுபோல சவுண்ட் கொடுத்துவிட்டு, மியூட் மோடுக்குச் சென்று, மியாவ் என்றுகூடச் சத்தம் எழுப்பாத காரியப் பூனைதான் திமுக. ஆனால், ஆட்சி பறிபோன பிறகு பாருங்கள் மண், மொழி, மானம் என்று உரிமை முழக்கத்தை எழுப்பி எம்பி எம்பிக் குதிக்கும்.

    எப்போதும் மக்களைத் தூண்டிவிட்டுக் குளிர்காயும் திமுக, இப்போது எரிச்சல் மற்றும் விரக்தி மோடில் அலறிக்கொண்டு இருக்கிறது. கடந்த மே மாதத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட கட்சியாகத் தவிக்கும் திமுக, காவிரி விவகாரத்தில் கபட நாடகமாடுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள்.

    எனவே, காவிரிப் பிரச்சனையில் திரு. ஸ்டாலின் அவர்களின், திமுக ஆட்சி போய்விட்டதே,  தவெக ஆட்சி வந்து விட்டதே என்று வன்மமாகப் பேசாமல் மக்கள் நலன் சார்ந்து உண்மையாகப் பேச வேண்டும். அப்படி அவரால் பேச முடியுமா முடியாதா? என்றால் அவர் உள்மனம் முடியாது என்றுதான் உண்மையான வன்மம் பேசும். இது அவர் மட்டுமன்று, உலகமே அறிந்த உண்மை.

    Cauvery Issue DMK Political criticism Tamil Nadu Politics TVK
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவெளியானது கார்த்தி நடிப்பில் ‘சர்தார் 2’ டீசர்… செப்டம்பரில் திரைக்கு வருகிறது!
    Next Article பொதுத் தேர்வுகள் முறைகேடு தடுப்பு திருத்த மசோதா – குடியரசுத் தலைவர் ஒப்புதல்
    Editor TN Talks

    Related Posts

    மொராக்கோவில் இருந்து சியூட்டாவுக்குள் ஆயிரக்கணக்கானோர் நுழைவு… உயிரிழப்பு 67 ஆக உயர்வு

    August 1, 2026

    நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும்… மாநில அரசும் பருத்தி கொள்முதல் செய்ய கோரிக்கை!

    August 1, 2026

    2030-க்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு… தொழில் துறை அமைச்சர் மதன் தகவல்

    August 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மொராக்கோவில் இருந்து சியூட்டாவுக்குள் ஆயிரக்கணக்கானோர் நுழைவு… உயிரிழப்பு 67 ஆக உயர்வு

    நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும்… மாநில அரசும் பருத்தி கொள்முதல் செய்ய கோரிக்கை!

    2030-க்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு… தொழில் துறை அமைச்சர் மதன் தகவல்

    வழக்குகள் போடுவதிலேயே தவெக அரசு கவனம் செலுத்துகிறது…. செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு

    “தேவையென்றால் இந்தி கற்றுக்கொள்ளுங்கள்!” – கவிஞர் வைரமுத்து பேச்சு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.