Close Menu
    What's Hot

    “தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும் ” – ராகுல் காந்தி எச்சரிக்கை

    நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: திராவிடர் கழகம் வழக்கு

    “தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல்” – ராகுல் காந்தி ஆதங்கம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கோவில் விழாக்களில் யானைகள் பயன்பாடு:  தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
    Featured

    கோவில் விழாக்களில் யானைகள் பயன்பாடு:  தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

    Editor web2By Editor web2August 1, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Elepahants
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவில் திருவிழாக்களில் யானைகளை பயன்படுத்துவது தொடர்பாக ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக் கோரிய வழக்கில், இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னையைச் சேர்ந்த சேவா டிரஸ்ட் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “கோவில் கும்பாபிஷேகம், பிரம்மோற்சவம் உள்ளிட்ட மத விழாக்களில் யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்விழாக்களுக்கு யானைகளை பயன்படுத்த அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால், அதனைத் தவிர்க்க தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வகுக்க வேண்டும்” என்று கோரப்பட்டுள்ளது.

    மேலும், யானைகள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், மாவட்ட அளவில் கண்காணிப்புக் குழுக்களை அமைத்து அவற்றின் பரிந்துரையின் அடிப்படையில் அனுமதி வழங்கலாம் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    003 court

    அதேபோல், விழாக்களில் பங்கேற்கும் யானைகளின் உடல்நிலை மற்றும் தகுதி குறித்து அரசு கால்நடை மருத்துவரின் சான்றிதழ் கட்டாயமாக பெற வேண்டும், யானைகளுக்கு குறைந்தது 8 மணி நேரம் ஓய்வு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளையும் அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என மனுதாரர் யோசனை முன்வைத்துள்ளார்.

    இந்த மனு, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுவுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

    ElephantWelfare MadrasHighCourt tamilnadu TempleFestivals
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிராலிமலை, கரூர் இடைத்தேர்தல் தடையை நீக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
    Next Article பாரதிராஜா – பாக்யராஜுக்கு பிரம்மாண்ட அஞ்சலி: ஆகஸ்ட் 16-ல் ‘ராஜகோபுரங்களின் நினைவு உற்சவம்’
    Editor web2
    • Website

    Related Posts

    “தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும் ” – ராகுல் காந்தி எச்சரிக்கை

    August 1, 2026

    நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: திராவிடர் கழகம் வழக்கு

    August 1, 2026

    “தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல்” – ராகுல் காந்தி ஆதங்கம்

    August 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும் ” – ராகுல் காந்தி எச்சரிக்கை

    நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: திராவிடர் கழகம் வழக்கு

    “தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல்” – ராகுல் காந்தி ஆதங்கம்

    பாரதிராஜா – பாக்யராஜுக்கு பிரம்மாண்ட அஞ்சலி: ஆகஸ்ட் 16-ல் ‘ராஜகோபுரங்களின் நினைவு உற்சவம்’

    கோவில் விழாக்களில் யானைகள் பயன்பாடு:  தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.