Close Menu
    What's Hot

    “உதயநிதி கைது: நீதிபதி உத்தரவை மீறிய திமிர்த்தனமான நடவடிக்கை”- திமுக காட்டம்

    திராவிடர் கழக நீட் எதிர்ப்பு பேரணி: காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

    உதயநிதி கைது: “ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும்!”: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சாதி மதமற்றவர் என சான்றிதழ்…. நடிகர் பார்த்திபன் தொடர்ந்த வழக்கில் அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!  
    Featured

    சாதி மதமற்றவர் என சான்றிதழ்…. நடிகர் பார்த்திபன் தொடர்ந்த வழக்கில் அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!  

    Editor TN TalksBy Editor TN TalksAugust 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    004 parthiban
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சாதி, மதமற்றவர் என சான்றிதழ் பெற விரும்புவோருக்கு உடனடியாக சான்று வழங்கும் வகையில் சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி நடிகர் பார்த்திபன் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

     நடிகர்  பார்த்திபன் தாக்கல் செய்த பொது நல  மனுவில், சாதி, மதமற்றவர் என சான்று கோரிய விண்ணப்பங்களை பரிசீலிக்கும் வகையில் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கி அரசாணைகள் பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது;

    ஆனால், அரசின் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்கும், அப்போதைய அரசுக்கும் இடையில் சுமூக உறவு இல்லாததால், இந்த உத்தரவு கிடப்பில் போடப்பட்டது; தற்போது அதுபோன்ற சூழ்நிலை இல்லை என்பதால், சட்டம் இயற்ற உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.

    சாதி, மதமற்றவர் என சான்று வழங்க வகை செய்யும் சட்டம் இயற்றுவதால் வேறு எந்த சட்டத்துக்கும் எந்த பாதிப்பு ஏற்படப் போவதில்லை; தற்போது சாதி மதமாற்றவர் என சான்று வழங்க சட்டங்கள் அல்லது உத்தரவுகள் ஏதும் இல்லாததால், புதிதாக சட்டம் இயற்றும்போது, சாதி, மதமற்றவர் என சான்று கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு பெரிய நிவாரணமாக அமையும் என பார்த்திபன் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுவிற்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க உள்துறை, வருவாய்த்துறை, சட்டத்துறை செயலாளர்களுக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தனர்.

    Actor Parthiban Caste and Religion Certificate Court Order Madras High Court Tamil Nadu government
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாற்றில் பறந்தது விஜய்யின் ஆர்டர்.. அரசுப் பள்ளியில் TVK முழக்கம்.. பூரித்த அமைச்சர் பிரபு!!
    Next Article காவிரி நீருக்காக தஞ்சையில் முழங்கிய திமுக.. உதயநிதி முன்னிலையில் போராட்டம் தொடக்கம்!
    Editor TN Talks

    Related Posts

    “உதயநிதி கைது: நீதிபதி உத்தரவை மீறிய திமிர்த்தனமான நடவடிக்கை”- திமுக காட்டம்

    August 4, 2026

    திராவிடர் கழக நீட் எதிர்ப்பு பேரணி: காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

    August 4, 2026

    உதயநிதி கைது: “ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும்!”: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

    August 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “உதயநிதி கைது: நீதிபதி உத்தரவை மீறிய திமிர்த்தனமான நடவடிக்கை”- திமுக காட்டம்

    திராவிடர் கழக நீட் எதிர்ப்பு பேரணி: காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

    உதயநிதி கைது: “ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும்!”: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

    தண்ணில கண்டம்… உதயநிதியை கலாய்க்கும் தவெக ஐ.டி.விங்க்!

    உதயநிதி ஸ்டாலின் கைது சரியானதே…. தவெக முதன்மை செய்தி தொடர்பாளர் புகழேந்தி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.