Close Menu
    What's Hot

    ‘சாதி, மதமற்றவர்’ சான்றிதழ்: பார்த்திபன் வழக்கில் தமிழக அரசுக்கு உத்தரவு!

    கர்நாடக அமைச்சரவை விரிவாக்கத்தில் அதிருப்தி … அமைச்சர் பதவி கிடைக்காததால் எம்.எல்.ஏ.  ராஜினாமா!

    “திரையில் விவசாயி வேடம்; நிஜத்தில் கள்ள மௌனம்” – முதல்வர் விஜய் மீது ஸ்டாலின் கடும் தாக்கு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»காவிரி நீர் விவகாரம்: உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழ்நாடு அரசு! 
    Featured

    காவிரி நீர் விவகாரம்: உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழ்நாடு அரசு! 

    Editor web2By Editor web2August 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Cauvery water
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காவிரி நீர் விவகாரத்தில் முதலமைச்சர்  விஜயின் அறிவுறுத்தலின்படி, கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்குரிய நீரை உரிய நேரத்தில் திறந்துவிட உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

    தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், காவிரி நீர் பகிர்வில் விகிதாச்சார அடிப்படையில் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய 26.954 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு வழங்கத் தவறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பாசனமும், குடிநீர் தேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    மேலும், காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த உத்தரவின்படி 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,500 கன அடி நீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தாலும், பிலிகுண்டுலு எல்லைப் பகுதியில் தற்போது அதிகபட்சமாக 550 கன அடி நீர் மட்டுமே வந்து கொண்டிருப்பதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    supreme court

    ஆகஸ்ட் 3-ஆம் தேதி நிலவரப்படி, கர்நாடக மாநிலத்தின் முக்கிய அணைகளான கே.ஆர்.எஸ். அணையில் 23 டிஎம்சி, கபினி அணையில் 18.6 டிஎம்சி, ஹாரங்கி அணையில் 7.8 டிஎம்சி, ஹேமாவதி அணையில் 28 டிஎம்சி என மொத்தம் 77.53 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளதாகவும், இந்த அளவிலான நீர் இருப்பு உள்ள நிலையில், தமிழகத்திற்கு விகிதாச்சார அடிப்படையில் தண்ணீர் திறப்பதில் கர்நாடகாவுக்கு எந்தவித சிரமமும் இருக்க முடியாது என்றும் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது.

    எனவே, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை அமல்படுத்தும் வகையில், தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள 26.954 டிஎம்சி தண்ணீரை உடனடியாக திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்திடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

    CauveryWaterDispute karnataka supremecourt tamilnadu
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“ஆய்வு என்ற பெயரில் பட்டாசுத் தொழிலை முடக்காதீர்கள்!” – அரசு நடவடிக்கைக்கு தங்கம் தென்னரசு கண்டனம்
    Next Article மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி…. எம்பிராய்டரி வேலை செய்யும் பெண்ணின் வங்கிக் கணக்கில் விழுந்த ரூ.100 கோடி!
    Editor web2
    • Website

    Related Posts

    ‘சாதி, மதமற்றவர்’ சான்றிதழ்: பார்த்திபன் வழக்கில் தமிழக அரசுக்கு உத்தரவு!

    August 3, 2026

    கர்நாடக அமைச்சரவை விரிவாக்கத்தில் அதிருப்தி … அமைச்சர் பதவி கிடைக்காததால் எம்.எல்.ஏ.  ராஜினாமா!

    August 3, 2026

    “திரையில் விவசாயி வேடம்; நிஜத்தில் கள்ள மௌனம்” – முதல்வர் விஜய் மீது ஸ்டாலின் கடும் தாக்கு!

    August 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘சாதி, மதமற்றவர்’ சான்றிதழ்: பார்த்திபன் வழக்கில் தமிழக அரசுக்கு உத்தரவு!

    கர்நாடக அமைச்சரவை விரிவாக்கத்தில் அதிருப்தி … அமைச்சர் பதவி கிடைக்காததால் எம்.எல்.ஏ.  ராஜினாமா!

    “திரையில் விவசாயி வேடம்; நிஜத்தில் கள்ள மௌனம்” – முதல்வர் விஜய் மீது ஸ்டாலின் கடும் தாக்கு!

    பைக் டாக்சிக்கு அனுமதி கிடையாது-மீறி ஓட்டினால் அபராதம்: தமிழக அரசு அதிரடி

    அண்டை மாநிலங்களில் குவியும் தொழில் முதலீடுகள்… தவெக ஆட்சியில் பெரும் வீழ்ச்சியில் தமிழகம் – நயினார் குற்றச்சாட்டு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.