Close Menu
    What's Hot

    ‘சாதி, மதமற்றவர்’ சான்றிதழ்: பார்த்திபன் வழக்கில் தமிழக அரசுக்கு உத்தரவு!

    கர்நாடக அமைச்சரவை விரிவாக்கத்தில் அதிருப்தி … அமைச்சர் பதவி கிடைக்காததால் எம்.எல்.ஏ.  ராஜினாமா!

    “திரையில் விவசாயி வேடம்; நிஜத்தில் கள்ள மௌனம்” – முதல்வர் விஜய் மீது ஸ்டாலின் கடும் தாக்கு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கர்நாடக அமைச்சரவை விரிவாக்கத்தில் அதிருப்தி … அமைச்சர் பதவி கிடைக்காததால் எம்.எல்.ஏ.  ராஜினாமா!
    Featured

    கர்நாடக அமைச்சரவை விரிவாக்கத்தில் அதிருப்தி … அமைச்சர் பதவி கிடைக்காததால் எம்.எல்.ஏ.  ராஜினாமா!

    Editor web2By Editor web2August 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    DK Sivakumar 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கத்தைத் தொடர்ந்து ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் அதிருப்தி வெடித்துள்ளது.  அமைச்சர் பதவி கிடைக்காத சில எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா மிரட்டல் விடுத்துள்ளதால் கர்நாடகா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இரண்டு மாதங்களுக்கு முன்பு முதலமைச்சராக பதவியேற்ற டி.கே. சிவக்குமார், 13 அமைச்சர்களுடன் ஆட்சியைத் தொடங்கியிருந்தார். தற்போது அமைச்சரவையில் இருந்த 20 காலியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. புதியதாக பதவியேற்ற 20 அமைச்சர்களில் 9 பேர் புதுமுகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    அமைச்சரவையில் இடம்பெறாததால் மூன்று முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட யஷ்வந்த்ராய்கவுடா பட்டீல் தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். “40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். அமைச்சரவை வாய்ப்பு மறுக்கப்பட்டதால் மிகவும் மனவேதனை அடைந்துள்ளேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

    மற்றொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான பெளலூர் கோபாலகிருஷ்ணாவும், தன்னை அமைச்சராக்காததால் எம்.எல்.ஏ. பதவியுடனும் மாநில வனத்துறை தொழில் கழகத் தலைவர் பதவியுடனும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். “முதல்வர் அல்லது அமைச்சர்களின் வாரிசுகளுக்கே வாய்ப்பு கிடைக்கிறது” என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    இந்த அதிருப்தி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.கே. சிவக்குமார், “கட்சியில் ஏராளமான எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அனைவருக்கும் ஒரே நேரத்தில் அமைச்சரவைப் பொறுப்பு வழங்க இயலாது. முன்பு சித்தராமையா அமைச்சரவையில் எனக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை; பின்னர் அமைச்சர் ஆனேன். அதுபோல எதிர்காலத்தில் அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும்” என்றார்.

    இதற்கிடையில், முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் ஆதிக்கம் அமைச்சரவை அமைப்பிலும் பிரதிபலித்துள்ளது. 33 அமைச்சர்களில் 21 பேர் ஏற்கனவே சித்தராமையா அமைச்சரவையில் பணியாற்றியவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மேலும், முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். மல்லிகார்ஜுனை அமைச்சரவையில் சேர்க்கும் வகையில் கடைசி நேரத்தில் பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டதாகவும், அமைச்சராக்கப்படாவிட்டால் கட்சியை விட்டு விலகுவேன் என அவர் எச்சரித்ததைத் தொடர்ந்து இந்த மாற்றம் செய்யப்பட்டதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    அமைச்சரவை வாய்ப்பு கிடைக்காததால் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.

    CabinetExpansion congress DKShivakumar KarnatakaPolitics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“திரையில் விவசாயி வேடம்; நிஜத்தில் கள்ள மௌனம்” – முதல்வர் விஜய் மீது ஸ்டாலின் கடும் தாக்கு!
    Next Article ‘சாதி, மதமற்றவர்’ சான்றிதழ்: பார்த்திபன் வழக்கில் தமிழக அரசுக்கு உத்தரவு!
    Editor web2
    • Website

    Related Posts

    ‘சாதி, மதமற்றவர்’ சான்றிதழ்: பார்த்திபன் வழக்கில் தமிழக அரசுக்கு உத்தரவு!

    August 3, 2026

    “திரையில் விவசாயி வேடம்; நிஜத்தில் கள்ள மௌனம்” – முதல்வர் விஜய் மீது ஸ்டாலின் கடும் தாக்கு!

    August 3, 2026

    பைக் டாக்சிக்கு அனுமதி கிடையாது-மீறி ஓட்டினால் அபராதம்: தமிழக அரசு அதிரடி

    August 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘சாதி, மதமற்றவர்’ சான்றிதழ்: பார்த்திபன் வழக்கில் தமிழக அரசுக்கு உத்தரவு!

    கர்நாடக அமைச்சரவை விரிவாக்கத்தில் அதிருப்தி … அமைச்சர் பதவி கிடைக்காததால் எம்.எல்.ஏ.  ராஜினாமா!

    “திரையில் விவசாயி வேடம்; நிஜத்தில் கள்ள மௌனம்” – முதல்வர் விஜய் மீது ஸ்டாலின் கடும் தாக்கு!

    பைக் டாக்சிக்கு அனுமதி கிடையாது-மீறி ஓட்டினால் அபராதம்: தமிழக அரசு அதிரடி

    அண்டை மாநிலங்களில் குவியும் தொழில் முதலீடுகள்… தவெக ஆட்சியில் பெரும் வீழ்ச்சியில் தமிழகம் – நயினார் குற்றச்சாட்டு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.