Close Menu
    What's Hot

    திட்டங்களின் பெயர் மாற்றம் காலம் காலமாக நடப்பதுதான்!. தொல். திருமாவளவன்!

    “கர்நாடகாவிடமிருந்து காவிரி நீரைப் பெறுவது சவாலாக உள்ளது” – அமைச்சர் ஆனந்த்

    இனிப்புக்கு கசப்பான செய்தி.. சர்க்கரை விலை குறைய இன்னும் 3 மாதங்கள் ஆகுமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»’நீட் தேர்வு வினாக்களை மனப்பாடம் செய்து கொண்டு சென்ற பாட நிபுணர்கள்’- அதிர்ச்சி தகவல்
    Featured

    ’நீட் தேர்வு வினாக்களை மனப்பாடம் செய்து கொண்டு சென்ற பாட நிபுணர்கள்’- அதிர்ச்சி தகவல்

    Editor web2By Editor web2August 7, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    NEET symbol
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ  மேற்கொண்ட விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய தேர்வு முகமை  (NTA ) அலுவலகத்தில் பணியாற்றிய மூன்று பாட நிபுணர்கள், தேர்வு வினாக்களை பல்வேறு முறைகளில் வெளியே கொண்டு சென்று கசிவுக்கு காரணமாக இருந்ததாக குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.

    டெல்லி விரைவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், உயிரியல் நிபுணர் மனிஷா மந்தாரே, வேதியியல் நிபுணர் பிரல்ஹாத் வித்தல்ராவ் குல்கர்ணி, இயற்பியல் நிபுணர் மனிஷா சஞ்சய் ஹவால்தார் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

    சிபிஐ விசாரணையின்படி, தேசிய தேர்வு முகமையின் ரகசியப் பிரிவில் மொழிபெயர்ப்பு பணிக்காக வழங்கப்பட்ட வெற்று தாள்களை குல்கர்ணி சிறிய சீட்டுகளாக கிழித்து, 135 வேதியியல் வினாக்களையும் அவற்றின் விடைத் தேர்வுகளையும் சுருக்கமாக எழுதி வெளியே கொண்டு சென்றுள்ளார். பின்னர் இணைக் குற்றவாளி மனிஷா வாக்மரே உதவியுடன் சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்தி, மாணவர்களுக்கு அந்த வினாக்களையும் சரியான பதில்களையும் கூறியதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

    உயிரியல் பாட நிபுணரான மனிஷா மந்தாரே, தாவரவியல் மற்றும் விலங்கியல் வினாக்களை மொழிபெயர்த்த பிறகு, ஹோட்டல் அறைக்குத் திரும்பி, அதனுடன் தொடர்புடைய பகுதிகளை NCERT பாடப்புத்தகங்களில் குறியிட்டு வைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் தனது புனே இல்லத்தில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

    இயற்பியல் நிபுணரான மனிஷா ஹவால்தார், வினாக்களை மனப்பாடம் செய்து, பின்னர் ஹோட்டல் அறையில் அவற்றை சுருக்கமாக எழுதி வைத்ததாக சிபிஐ கண்டறிந்துள்ளது.

    விசாரணையில் மேலும் வெளிச்சத்துக்கு வந்த முக்கிய அம்சம், NTA அலுவலகத்தின் ரகசியப் பிரிவிற்குள் நுழையும் போதும் வெளியேறும் போதும் இந்த நிபுணர்களிடம் உடல் சோதனை (Frisking) நடத்தப்படவில்லை என்பதாகும். மேலும், அந்தப் பிரிவை கண்காணிக்கும் தனி CCTV கட்டுப்பாட்டு அறையும் இல்லாதது பாதுகாப்பு குறைபாடாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    மேலும் தேசிய தேர்வு முகமை அலுவலகத்தில் வெறும் 20 முதல் 25 நாட்கள் வரையிலான CCTV காட்சிகள் மட்டுமே கிடைத்ததாகவும், வினாத்தாள் கசிவில் பாதுகாப்பு நடைமுறைகளில் கடுமையான குறைபாடுகள் இருந்ததாகவும் சிபிஐ குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது.

    CBI EducationNews NEETPaperLeak nta
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆதவ் அர்ஜுனா எழுப்பிய கேள்வி.. தொகுதி மறுவரையறை குறித்து உதயநிதி சொன்ன பதில்!
    Next Article UPI கட்டணம் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்.. யாருக்கு பொருந்தும்? முழு தகவல்!
    Editor web2
    • Website

    Related Posts

    திட்டங்களின் பெயர் மாற்றம் காலம் காலமாக நடப்பதுதான்!. தொல். திருமாவளவன்!

    August 7, 2026

    “கர்நாடகாவிடமிருந்து காவிரி நீரைப் பெறுவது சவாலாக உள்ளது” – அமைச்சர் ஆனந்த்

    August 7, 2026

    இனிப்புக்கு கசப்பான செய்தி.. சர்க்கரை விலை குறைய இன்னும் 3 மாதங்கள் ஆகுமா?

    August 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திட்டங்களின் பெயர் மாற்றம் காலம் காலமாக நடப்பதுதான்!. தொல். திருமாவளவன்!

    “கர்நாடகாவிடமிருந்து காவிரி நீரைப் பெறுவது சவாலாக உள்ளது” – அமைச்சர் ஆனந்த்

    இனிப்புக்கு கசப்பான செய்தி.. சர்க்கரை விலை குறைய இன்னும் 3 மாதங்கள் ஆகுமா?

    டெல்லி  டூ திருச்செந்தூர்… ஐந்தாண்டுகளுக்குப் பின் மீட்கப்பட்ட இளைஞர்!

    நாளை முதல்வர் விஜய் தலைமையில் எம்.பி.க்கள் கூட்டம்!. திமுக புறக்கணிக்க முடிவு?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.