Close Menu
    What's Hot

    ஸ்டாலின் கண்டித்தார்; மீண்டும் கைது செய்துவிடாதீர்கள்!. அவையில் மார்க்கண்டேயன் கலகலப்பு!

    மெஸ்ஸி சர்ச்சை!. பிரேசில் கால்பந்து அணியை வரவேற்க தயாராகும் கொல்கத்தா?

    ஷேக் ஹசீனாவின் செய்தியாளர் சந்திப்புக்கும் இந்தியாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை!. ரந்தீர் ஜெய்ஸ்வால் திட்டவட்டம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»மெஸ்ஸி சர்ச்சை!. பிரேசில் கால்பந்து அணியை வரவேற்க தயாராகும் கொல்கத்தா?
    விளையாட்டு

    மெஸ்ஸி சர்ச்சை!. பிரேசில் கால்பந்து அணியை வரவேற்க தயாராகும் கொல்கத்தா?

    Editor web3By Editor web3August 7, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Brazilian football team kolkata
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஐந்து முறை பிஃபா உலகக் கோப்பையை வென்ற பிரேசில் கால்பந்து அணிக்கும், இந்திய அணிக்கும் இடையிலான சர்வதேச நட்புப் போட்டி அக்டோபர் 3 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. இந்திய கால்பந்து வரலாற்றில் மிகவும் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாக கருதப்படும் இந்தப் போட்டியை நடத்துவதற்கு மேற்கு வங்க மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

    சால்ட் லேக் மைதானத்தில் (Salt Lake Stadium) நடைபெறவுள்ள இந்தப் போட்டி, பிஃபா தரவரிசையில் முதல் ஐந்து இடங்களுக்குள் உள்ள ஒரு அணியை இந்தியா சொந்த மண்ணில் எதிர்கொள்ளும் முதல் நிகழ்வாக இருக்கப் போகிறது. இதற்கான நிர்வாக உதவிகளை வழங்க மாநில அரசு உறுதியளித்துள்ளதாக AIFF தலைவர் கல்யாண் சவுபே தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் லியோனல் மெஸ்சி கொல்கத்தாவுக்கு வந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் பாதுகாப்பு  சிக்கல்களை அடுத்து, தற்போது இந்த அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    மெஸ்சியின் வருகையின் போது ஏற்பட்ட குழப்பங்களைப் போல இம்முறையும் நடக்குமா என்ற அச்சம் எழுந்துள்ளது குறித்துப் பேசிய கல்யாண் சவுபே, அந்த ஒப்பீடுகள் தேவையற்றவை என்றார். இது ஒரு தனிநபரின் கண்காட்சி நிகழ்ச்சி கிடையாது என்றும், இது ஒரு அதிகாரப்பூர்வ ஃபிஃபா சர்வதேசப் போட்டி என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “கடந்த முறை நடந்தது ஒரு கால்பந்து போட்டி அல்ல, அது உலகப் புகழ்பெற்ற ஒரு வீரரின் தனிப்பட்ட நிகழ்வு. ஆனால், இது ஒரு சர்வதேச கால்பந்து போட்டி. ஃபிஃபா மற்றும் ஏஎப்சி அமைப்புகளின் திட்டமிடப்பட்ட நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படியே இது நடத்தப்படும். பல துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படும். அரசின் முழுமையான ஒத்துழைப்புடன் இந்த நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

    இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியின் மூலம் கொல்கத்தா மற்றும் இந்திய கால்பந்தின் பெருமையை உலக அரங்கில் கொண்டு செல்ல மேற்கு வங்க அரசுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு கிடைக்கும் என்றும் சவுபே குறிப்பிட்டார். இந்திய அணி பலம் வாய்ந்த அணிகளுடன் மோதி தனது திறனை வளர்த்துக்கொள்ள இதுபோன்ற சர்வதேச நட்புப் போட்டிகள் அவசியம் என்று AIFF கருதுகிறது. இந்தியாவின் தற்போதைய பிஃபா தரவரிசையை கருத்தில் கொண்டு, பிரேசில் அணியை இந்தியாவில் விளையாட வைப்பதற்காக நீண்ட காலமாக தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    Brazilian football team inidan foodball team kolkata Messi controversy kolkata
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஷேக் ஹசீனாவின் செய்தியாளர் சந்திப்புக்கும் இந்தியாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை!. ரந்தீர் ஜெய்ஸ்வால் திட்டவட்டம்!
    Next Article ஸ்டாலின் கண்டித்தார்; மீண்டும் கைது செய்துவிடாதீர்கள்!. அவையில் மார்க்கண்டேயன் கலகலப்பு!
    Editor web3
    • Website

    Related Posts

    ஸ்டாலின் கண்டித்தார்; மீண்டும் கைது செய்துவிடாதீர்கள்!. அவையில் மார்க்கண்டேயன் கலகலப்பு!

    August 7, 2026

    ஷேக் ஹசீனாவின் செய்தியாளர் சந்திப்புக்கும் இந்தியாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை!. ரந்தீர் ஜெய்ஸ்வால் திட்டவட்டம்!

    August 7, 2026

    நாய்களை ஃபீல்டர்களாக மாற்றி கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள்!. நெகிழ்ச்சி வீடியோ!

    August 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஸ்டாலின் கண்டித்தார்; மீண்டும் கைது செய்துவிடாதீர்கள்!. அவையில் மார்க்கண்டேயன் கலகலப்பு!

    மெஸ்ஸி சர்ச்சை!. பிரேசில் கால்பந்து அணியை வரவேற்க தயாராகும் கொல்கத்தா?

    ஷேக் ஹசீனாவின் செய்தியாளர் சந்திப்புக்கும் இந்தியாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை!. ரந்தீர் ஜெய்ஸ்வால் திட்டவட்டம்!

    நாய்களை ஃபீல்டர்களாக மாற்றி கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள்!. நெகிழ்ச்சி வீடியோ!

    மெட்டாவுக்கு பேரிடி!. ரூ.4,800 கோடி அபராதம்; சிறுவர் மனநல வழக்கில் அதிரடி!. இந்தியாவில் தொடரும் விசாரணை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.