சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் விதமாக, புதிதாக 15 பேர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் எட்டுப் பேர் மூத்த வழக்கறிஞர்கள் ஆவர். மீதமுள்ள ஏழுப் பேர் இதற்கு முன் மாவட்ட நீதிபதிகளாகப் பணியாற்றி வந்தவர்கள்.
வழக்கறிஞர்களாக இருந்து உயர் நீதிமன்ற நீதிபதிகளாகப் பொறுப்பேற்பவர்களின் பட்டியலில் என்.ரமேஷ், ஜி.கே.முத்துக்குமார், ஆர்.ஆர்.விவேகானந்தன், எஸ்.ரவிக்குமார், என்.திலீப்குமார், ஏ.மனோகரன், கே.கோவிந்தராஜன் மற்றும் ரஜ்னீஷ் பத்தியில் ஆகிய எட்டுப் பேர் இடம்பெற்றுள்ளனர்.
இதேபோல், மாவட்ட நீதிபதிகளாகப் பணியாற்றி தற்போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவி உயர்வு பெற்றுள்ளவர்களின் பட்டியலில் பி.முருகன், எம்.டி.சுமதி, எஸ்.அல்லி, சி.திருமகள் சந்திரசேகர், எஸ்.கார்த்திகேயன், பி.முருகேசன் மற்றும் என்.குணசேகரன் ஆகிய ஏழுப் பேர் இடம்பெற்றுள்ளனர்.
தற்போது நடைபெற்றுள்ள இந்த 15 புதிய நியமனங்களின் மூலம், சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, இதுவரை இருந்த நீதிபதி காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை ஒன்பதாகக் குறைந்துள்ளது
