Close Menu
    What's Hot

    தமிழகத்தின் உரிமையை காக்க வியூகம்!. எம்.பி.க்களுடன் முதலமைச்சர் விஜய் இன்று ஆலோசனை!. 

    இந்தியா – இலங்கை டெஸ்ட் தொடர்!. இலவசமாக நேரில் பார்க்கலாம்! இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!

    ரஷ்ய எரிசக்தி துறைக்கு எதிராக அமெரிக்க செனட்டில் புதிய மசோதா!. இந்தியா, சீனாவுக்கு பாதிப்பு?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தமிழகத்துக்கு விரைவில் மேலும் ஒரு விமான நிலையம்!. மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளித்த தேமுதிக எம்.பி. சுதீஷ்!
    Featured

    தமிழகத்துக்கு விரைவில் மேலும் ஒரு விமான நிலையம்!. மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளித்த தேமுதிக எம்.பி. சுதீஷ்!

    Editor web3By Editor web3August 8, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    L.K.sudish new airport
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வேலூர் விமான நிலையத்தை உடனடியாகப் பயன்பாட்டிற்கு கொண்டு வரக் கோரி, தேமுதிக மாநிலங்களவை உறுப்பினர் எல்.கே.சுதீஷ், மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார்.

    மத்திய அரசின் ‘உடான்’ (RCS-UDAN-II) திட்டத்தின் கீழ் கடந்த 2017-ஆம் ஆண்டு வேலூர் விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான கட்டுமானப் பணிகள் மற்றும் ஆய்வுகள் நிறைவடைந்து, இந்திய விமானப் போக்குவரத்து தலைமை இயக்ககத்தின் (DGCA) கள ஆய்வுகளும் தற்போது முழுமையாக முடிவடைந்துள்ளன.

    இதனைத் தொடர்ந்து, விமானப் போக்குவரத்து பாதுகாப்பு மையத்திடமிருந்து (BCAS) பெறப்பட வேண்டிய இறுதிப் பாதுகாப்பு அனுமதி மட்டுமே தற்போது நிலுவையில் உள்ளது. இந்தச் சான்றிதழ் கிடைத்தவுடன் உடனடியாக உரிமம் வழங்கி, விமான நிலையத்தைச் செயல்பாட்டிற்கு கொண்டு வர முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து எம்பி எல்.கே.சுதீஷ் வெளியிட்டுள்ள தகவலில், வேலூர், திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட வடதமிழக மக்கள் கடந்த 9 ஆண்டுகளாக விமானச் சேவைக்காகக் காத்திருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். வேலூர் விமான நிலையம் செயல்பாட்டிற்கு வரும் பட்சத்தில், இப்பகுதியில் மருத்துவச் சுற்றுலா, சிறு மற்றும் குறு (MSME) தொழில்கள் வளர்ச்சி அடைவதோடு, மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் பயனளிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளை வழங்கி, இறுதிப் பாதுகாப்பு அனுமதியையும் விமான நிலைய உரிமத்தையும் விரைந்து வழங்க வேண்டும் என்றும், வேலூரில் ‘உடான்’ விமான சேவைகளை உடனடியாகத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சரிடம் அவர் நேரில் கேட்டுக்கொண்டுள்ளார்.

    Another airport for tn Another airport soon DMDK MP Sudheesh petition tamil nadu union minister
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசென்னை உயர் நீதிமன்றத்திற்கு 15 புதிய நீதிபதிகள் நியமனம்!. நீதிபதிகளின் எண்ணிக்கை 66 ஆக உயர்வு!
    Next Article மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிவு!. மழை குறைந்ததால் கபினி உபரிநீர் திறப்பு குறைப்பு!
    Editor web3
    • Website

    Related Posts

    தமிழகத்தின் உரிமையை காக்க வியூகம்!. எம்.பி.க்களுடன் முதலமைச்சர் விஜய் இன்று ஆலோசனை!. 

    August 8, 2026

    டாஸ்மாக்கில் கூடுதல் கட்டணத்துக்கு முற்றுப்புள்ளி!. ஆன்லைன் முறை குறித்து அமைச்சர் விக்னேஷ் விளக்கம்!

    August 8, 2026

    கமுதியில் தனியார் விடுதி மீது பெட்ரோல் குண்டு வீச்சு!. மர்மநபர்களுக்கு வலைவீச்சு!

    August 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழகத்தின் உரிமையை காக்க வியூகம்!. எம்.பி.க்களுடன் முதலமைச்சர் விஜய் இன்று ஆலோசனை!. 

    இந்தியா – இலங்கை டெஸ்ட் தொடர்!. இலவசமாக நேரில் பார்க்கலாம்! இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!

    ரஷ்ய எரிசக்தி துறைக்கு எதிராக அமெரிக்க செனட்டில் புதிய மசோதா!. இந்தியா, சீனாவுக்கு பாதிப்பு?

    டாஸ்மாக்கில் கூடுதல் கட்டணத்துக்கு முற்றுப்புள்ளி!. ஆன்லைன் முறை குறித்து அமைச்சர் விக்னேஷ் விளக்கம்!

    கமுதியில் தனியார் விடுதி மீது பெட்ரோல் குண்டு வீச்சு!. மர்மநபர்களுக்கு வலைவீச்சு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.