Close Menu
    What's Hot

    நிதிநிலை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை – நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி

    மாறி மாறி பழிபோடும் அமெரிக்கா-ஈரான்!. “எங்க மாலுமிகள் உயிரோடு விளையாடாதீங்க!. ஜெய்சங்கர் வார்னிங்!

    பல்வேறு அடுக்கு பாலிஸ்டிக் ஏவுகணைகள்; அடுத்தடுத்து 3 சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியது டிஆர்டிஓ

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஒரு மீன் ரூ.26,000-ப்பே… அப்படி என்ன சிறப்பு?
    தமிழ்நாடு

    ஒரு மீன் ரூ.26,000-ப்பே… அப்படி என்ன சிறப்பு?

    Editor TN TalksBy Editor TN TalksMay 14, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WhatsApp Image 2025 05 14 at 2.08.16 PM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை மீன் சந்தையில் மருத்துவக் குணம் கொண்ட ஒரு மீன் ரூ.26,000-க்கு விற்பனையானது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

    முத்துப்பேட்டை பகுதி என்பது கடல் சார்ந்த பகுதி. இப்பகுதியில் உள்ள ஆசாத் நகர் மற்றும் பெரியக்கடை தெரு மீன் சந்தைக்கு, பல்வேறு வகை மீன் வகைகள் விற்பனைக்கு குவிக்கப்படும். இதில் குறிப்பாக இப்பகுதியில் உள்ள அலையாத்திகாடு வேர்களில் உற்பத்தியாகி வளரக்கூடிய மீன் வகைகள் அதிக ருசி கொண்டதாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அதனால் இப்பகுதியில் உற்பதியாகும் கொடுவா, கெண்டை மீன், வெள்ளாம் பொடி, கத்தாஐ போன்ற மீன்கள் அதிகளவில் விற்பனையாகும். மற்றவகை மீன்கள் அருகேயுள்ள நாகை, கோடியக்கரை, மல்லிபட்டினம் போன்ற பகுதிகளில் இருந்து இங்கு விற்பனை கொண்டுவரப்படுகிறது.

    முத்துப்பேட்டை அலையாத்திகாடுகள் நிறைந்த லகூன் பகுதியிலிருந்து அதிக மருத்துவ குணம் கொண்ட கத்தாழை மீன்கள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. ஒரு கிலோ கத்தாழை மீன் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக ஆண் கத்தாழை மீனில் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படும் விலையுயர்ந்த ’நெட்டி’ உள்ளதால், அவ்வகை மீன்களுக்கு போட்டி அதிகம். சென்ற ஆண்டு சுமார் 10 கிலோ கொண்ட 3 கத்தாழை மீன்கள் ரூ.48,900-க்கு விலைபோனது. இந்த காட்சிகள் இணையத்தில் வைரலானது.

    இந்த விலையை மிஞ்சும் அளவு நேற்று (13.05.2025) ஆசாத்நகர் மீன் மார்க்கெட்டில் மீனவர் ஒருவர் வலையில் சிக்கிய 4 கிலோ கொண்ட ஒரு கத்தாழை மீன் ஏலத்திற்கு வந்தது. ரூ.20,000க்கு ஆரம்பிக்கப்பட்ட ஏலம், கடைசியில் ரூ.26,000க்கு விலைபோனது. இந்தக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

    கத்தாழை மீன் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை மீன் சந்தை
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticlePravinkoodu Shappu review :ஒரு கள்ளுக்கடை, ஒரு கொலை, ஒரு காதல்…
    Next Article பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்… ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.4 ஆயிரம் கோடியில் புதிய ராக்கெட் ஏவுதளம்…
    Editor TN Talks

    Related Posts

    நிதிநிலை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை – நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி

    June 13, 2026

    தேர்தல் தோல்வி!. அதிமுகவில் இன்று முதல் கள ஆய்வு!. மாவட்ட வாரியாக இபிஎஸ் ஆலோசனை!

    June 13, 2026

    நூற்றாண்டு கடந்தும் குறையாத கம்பீரம்… ‘சிங்கார சென்னையின் இதயம்’ எழும்பூருக்கு 118 வயது!

    June 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நிதிநிலை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை – நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி

    மாறி மாறி பழிபோடும் அமெரிக்கா-ஈரான்!. “எங்க மாலுமிகள் உயிரோடு விளையாடாதீங்க!. ஜெய்சங்கர் வார்னிங்!

    பல்வேறு அடுக்கு பாலிஸ்டிக் ஏவுகணைகள்; அடுத்தடுத்து 3 சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியது டிஆர்டிஓ

    தேர்தல் தோல்வி!. அதிமுகவில் இன்று முதல் கள ஆய்வு!. மாவட்ட வாரியாக இபிஎஸ் ஆலோசனை!

    பிஃபா உலகக் கோப்பை!. 40 ஆண்டு கால ஏக்கம்!. சொந்த மண்ணில் அசத்திய கனடா!. போஸ்னியாவுடன் டிரா!.

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.