Close Menu
    What's Hot

    பரந்தூர் விமான நிலையத் திட்டம்..!! விஜய் அரசுக்கு சவால்..!! நடக்கப்போவது என்ன..??

    குட்கா, பான் மசாலா புகையிலை பொருட்களுக்கு தமிழகத்தில் தடை நீட்டிப்பு!

    திமுக பாதையில் பயணிப்பதா..?? தவெக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»“ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டும் என்று கருணாநிதியே கூறியிருக்கிறார்” – பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு!
    தமிழ்நாடு

    “ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டும் என்று கருணாநிதியே கூறியிருக்கிறார்” – பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு!

    Editor TN TalksBy Editor TN TalksMay 26, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    nainar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டம் குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எதிர்ப்புக் கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில், திமுகவின் முன்னாள் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியே இத்திட்டத்தை ஆதரித்து பேசியுள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    கருத்தரங்கில் நயினார் நாகேந்திரன்:

    சென்னை திருவான்மியூரில் இன்று நடைபெற்ற “ஒரே நாடு ஒரே தேர்தல்” குறித்த கருத்தரங்கில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்றுப் பேசினார். இக்கருத்தரங்கில் ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராகவும், தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.

    “கருணாநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ மேற்கோள்”:

    நிகழ்ச்சியில் பேசிய நயினார் நாகேந்திரன், “தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ‘ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அமல்படுத்தப்பட்டால், அது ஒரே கட்சி தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் அமர்வதற்கு சாதகமாக அமைந்துவிடும்’ என்று கூறி வருகிறார். ஆனால், அவரது தந்தை, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தனது சுயசரிதையான ‘நெஞ்சுக்கு நீதி’ புத்தகத்தில், ‘அரசு இயந்திரங்களின் செயல்பாடு, நேரம் மற்றும் வளங்களை மீதப்படுத்தும் வகையில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மீண்டும் அமல்படுத்தப்படுவது அவசியமானது’ எனக் குறிப்பிட்டிருந்தார்” என்று சுட்டிக்காட்டினார்.

    “ஒரே நாடு, ஒரே தேர்தல்” முறை அமல்படுத்தப்பட்டால் அது ஒரே கட்சி தொடர்ந்து ஆட்சி அரியணையில் அமர்வதற்கு தோதாக அமைந்துவிடும் எனக் கூறுகிறார், தமிழக முதல்வர் திரு. @mkstalin அவர்கள்.

    ஆனால் அவரின் தந்தை முன்னாள் முதல்வர் திரு. கருணாநிதி அவர்களோ தனது சுயசரிதையான “நெஞ்சுக்கு நீதி” என்ற… pic.twitter.com/zqVy04hnJ3

    — Nainar Nagenthiran (@NainarBJP) May 26, 2025

    “ஒரு லட்சம் கோடி செலவு சேமிக்கலாம்”:

    சமீபத்திய 2024 ஆம் ஆண்டு தேர்தல்களில் நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட நயினார் நாகேந்திரன், “இதுவே ஒரே தேர்தலாக இருந்திருந்தால், குறைந்தபட்சம் 12,000 கோடி ரூபாயை சேமித்திருக்கலாம். அதன் மூலம் மக்கள் நலனுக்கான வளர்ச்சிப் பணிகளையும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி இருக்கலாம். உண்மையில், 1967 ஆம் ஆண்டு வரை நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தான் தேர்தல்கள் நடத்தப்பட்டன” என்றார்.

    “கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு விவாதிக்க வேண்டும்”:

    “நம் நாட்டின் வளமான எதிர்காலத்திற்கும், நாட்டு மக்களின் நேரம், ஆற்றல் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கும் வழிவகை செய்யும் இந்த ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ கொள்கையானது, கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு, திறந்த மனதுடன் விவாதிக்கப்பட வேண்டியது” என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார்.

    இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு “ஒரே நாடு ஒரே தேர்தல்” குறித்து மக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்திய ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கு நயினார் நாகேந்திரன் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.

    Nainar Nagendran
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமழைநீர் தேக்கம்.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு.. மாநகராட்சி மீது பொதுமக்கள் அதிருப்தி!
    Next Article கனமழையால் இடிந்து விழுந்த சுற்றுச்சுவர்.. வைரலாகும் வீடியோ!
    Editor TN Talks

    Related Posts

    பரந்தூர் விமான நிலையத் திட்டம்..!! விஜய் அரசுக்கு சவால்..!! நடக்கப்போவது என்ன..??

    June 2, 2026

    குட்கா, பான் மசாலா புகையிலை பொருட்களுக்கு தமிழகத்தில் தடை நீட்டிப்பு!

    June 2, 2026

    திமுக பாதையில் பயணிப்பதா..?? தவெக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி..!!

    June 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பரந்தூர் விமான நிலையத் திட்டம்..!! விஜய் அரசுக்கு சவால்..!! நடக்கப்போவது என்ன..??

    குட்கா, பான் மசாலா புகையிலை பொருட்களுக்கு தமிழகத்தில் தடை நீட்டிப்பு!

    திமுக பாதையில் பயணிப்பதா..?? தவெக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி..!!

    அமித்ஷாவுடன் சந்திப்பு..!! பாஜகவில் இருந்து விலகியது ஏன்? காரணங்களை அடுக்கிய அண்ணாமலை..!!

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    Trending Posts

    திரையுலகை ஆளும் சக்ரவர்த்தி ‘இசைஞானி’ இளையராஜா!

    June 2, 2026

    எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்..!! திருமாவளவன் திட்டவட்டம்..!!

    June 2, 2026

    இசைஞானி இளையராஜா பிறந்தநாள்..! வாழ்த்து தெரிவிக்க குவிந்த ரசிகர்கள்..!

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    தமிழக அமைச்சரவை மூப்பு நிலைப் பட்டியல் வெளியீடு: முதல் 3 இடங்களில் முதலமைச்சர் விஜய், ஆனந்த், ஆதவ் அர்ஜூனா!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.