Close Menu
    What's Hot

    முகத்தில் பருக்கள் உள்ளதா? அப்போ உடலில் இந்த பிரச்சனை கன்பர்ம்!

    10 வேட்பாளர்கள் கூட தவெகவில் கிடையாது! நயினார் நாகேந்திரன் கிண்டல்

    அதிமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்க 10 பேர் குழு! விரைவில் தமிழகம் முழுவதும் பயணம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»நமது லட்சியம், 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வது நிச்சயம் – எஸ்.பி.வேலுமணி
    அரசியல்

    நமது லட்சியம், 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வது நிச்சயம் – எஸ்.பி.வேலுமணி

    Editor TN TalksBy Editor TN TalksJune 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    images
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2026 சட்டமன்ற தேர்தல் நமது இலட்சியம், அதிமுக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடியார் தலைமையில் 200 தொகுதிகளுக்குமேல் வெற்றி பெறுவது நிச்சயம் என்று கோவையில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி தொண்டர்களிடையே உற்சாகமாக பேசினார்.

    முன்னாள் அமைச்சரும்,அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் பூத் கமிட்டி நிர்வாகிகள், மற்றும் பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் கோவையில் நடைபெற்றது.

    கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி, சூலூர் சட்டமன்ற தொகுதி, பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி, மற்றும் வால்பாறை சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பூத்கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் கோவை அதிமுக தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ் பி வேலுமணி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்ட தேர்தல் பொறுப்பாளர் கொள்கைபரப்பு துணை செயலாளர் தோப்பு அசோகன், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன், சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கந்தசாமி, உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது, வரக்கூடிய 2026 சட்டமன்ற தேர்தல் நமது இலட்சியம், கழக பொதுச்செயலாளர் தலைமையில் 200 தொகுதிக்குமேல் நாம் வெல்வது நிச்சயம். கோவை மாவட்டத்தில் இதுவரை அதிமுக மட்டுமே அனைத்து திட்டங்களையும், செயல்படுத்தியுள்ளது. இதுவரை மக்களுக்காக திமுக எதையும் செய்யவில்லை, மக்களிடம் வாக்கு கேட்கும் தகுதி அதிமுக தொண்டர்களாகிய உங்களுக்குதான் உள்ளது. எனவே நெஞ்சை நிமிர்த்தி மக்களை சந்தித்து வாக்காளர் படிவங்களை சரிபார்த்து உறுதிபடுத்துங்கள் என்று கூறினார். மேலும் நாளை தமிழகத்தை ஆளபோவது அதிமுகதான் எஸ்.பி.வேலுமணி உறுதிபட கூறினார்.

    2026 Election 2026 தேர்தல் AIADMK AIADMK Campaign AIADMK Target Constituency Goal SP Velumani SP Velumani Speech Tamil Election News Tamil Nadu Politics அதிமுக அதிமுக பேச்சு எஸ்பி வேலுமணி தமிழக அரசியல் தொகுதிகள் இலக்கு
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“சார்” என்று பேசுவது நீதிமன்ற அவமதிப்பு.. வழக்கறிஞர் மேரி ஜெயந்தி
    Next Article மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய குகேஷ்… மேஜையில் குத்தி கோவத்தைக் காட்டிய கார்ல்சன்…
    Editor TN Talks

    Related Posts

    10 வேட்பாளர்கள் கூட தவெகவில் கிடையாது! நயினார் நாகேந்திரன் கிண்டல்

    December 25, 2025

    அதிமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்க 10 பேர் குழு! விரைவில் தமிழகம் முழுவதும் பயணம்

    December 25, 2025

    இறந்தவர்கள் பட்டியலில் நாதக வேட்பாளர் பெயர்! கொதித்தெழுந்த சீமான்

    December 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முகத்தில் பருக்கள் உள்ளதா? அப்போ உடலில் இந்த பிரச்சனை கன்பர்ம்!

    10 வேட்பாளர்கள் கூட தவெகவில் கிடையாது! நயினார் நாகேந்திரன் கிண்டல்

    அதிமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்க 10 பேர் குழு! விரைவில் தமிழகம் முழுவதும் பயணம்

    எஸ்ஐஆர் படிவத்தை முறையாக நிரப்பாததால் பெயர் நீக்கம் – 10 லட்சம் பேருக்கு விரைவில் நோட்டீஸ்!

    இறந்தவர்கள் பட்டியலில் நாதக வேட்பாளர் பெயர்! கொதித்தெழுந்த சீமான்

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.