தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து நடிகரும், தவெக தலைவருமான விஜய் செய்தி வெளியிட்டுள்ளார்.

 

இதுதொடர்பாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள செய்தியின் விவரம் வருமாறு..

என் பிறந்தநாளையொட்டி வாழ்த்து கூறிய அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகம் மற்றும் ஊடக உலகத்தைச் சேர்ந்த நண்பர்கள், நலம் விரும்பிகள், என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்கள், தவெக தலைமைச் செயலக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து அன்பை பொழிந்தவர்களுக்கு என் இதயங்கனிந்த நன்றிகள். உங்கள் ஆதரவு தான் மக்களுக்கு தொண்டாற்றும் என் பயணத்திற்கான எரிசக்தி. ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி ஒன்றாக நடைபோடுவோம்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்

Share.
Leave A Reply

Exit mobile version