போதைப்பொருள் வழக்கில் தொடர்பிருப்பதாகக் கூறப்படும் நடிகர் கிருஷ்ணாவைக் கைது செய்ய ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கேரளாவில் இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் கிருஷ்ணாவின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருப்பதால், சைபர் கிரைம் நிபுணர்களின் உதவியுடன் அவரது இருப்பிடத்தைக் கண்டறியும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விரைவில் அவர் கைது செய்யப்படுவார் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
சமீபத்தில் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த் அளித்த வாக்குமூலத்தில், நடிகர் கிருஷ்ணாவிற்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிவித்ததையடுத்து, போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.