கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற ஈரோடு மாணவர்களுக்கு நடிகர் ஜீவா கறிவிருந்து கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

சென்னை பெரம்பூர் ICF விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த நடிகர் ஜீவா ரசிகர் நற்பணி மன்ற மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும், ரசிகர் மன்றத்தின் மாவட்ட தலைவர் சக்திவேல் அவர்கள் பயிற்சியாளராக இருந்து வழிநடத்தினார்.

வெற்றி பெற்ற மாணவர்களை, நடிகர் ஜீவா மதுரையில் நடைபெற்ற பாண்டி கோவில் கெடாவெட்டு விழாவிற்கு நேரில் வரவழைத்து, அவர்களுக்கு சிறப்பான முறையில் கறி விருந்து அளித்து மனதாரப் பாராட்டி கௌரவித்தார்.

ஜீவாவின் இந்த அன்பான செயலைக் கண்டு, அங்கு கூடியிருந்த பாண்டி கோவில் பக்தர்களும் அவரை வெகுவாகப் பாராட்டினர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version