நடிகர் தனுஷ் கட்சி தொடங்குவாரா என்பது குறித்து அவரது தந்தையும், இயக்குநரும், ஹபீபி திரைப்படத்தின் நடிகருமான கஸ்தூரி ராஜா பதில் அளித்துள்ளார்.

சென்னை தியாகராயர் நகரில் இயக்குனர் கஸ்தூரிராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய கூறியதாவது….

ஹபீபி திரைப்படத்தில் எனக்கு ஒரு நடிகனாக இவ்வளவு பெயர் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. படத்தில் நன்றாக நடித்து உள்ளதாகப் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

இந்தப் படம் தான் என்னை உலகம் முழுவதும் தெரிய வைத்துள்ளது. 48 வருடம் இயக்குனர் வாழ்க்கை.  இப்போது நடிகராக ஒரு வழக்கை கிடைத்துள்ளது. மேலும், தற்போது திரைப்படத்தில் நடிகராக நடிக்க நிறைய பாட வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கிறது.

முதல் மரியாதை படத்தை பாரதிராஜாவை தவிர வேறு யாராலும் இயக்கி இருக்க முடியாது. இயக்குனர் கையில் தான் ஒருவரின் கதாபாத்திரம் உள்ளது. ஒரு இயக்குநருக்கு பிடித்த மாதிரி நடிப்பது மிகவும் கடினம். தற்போது தான் எனக்கு அந்த கடினம் தெரிகிறது.

ஒரு வேலையை எடுத்தால் அதில் முழுமையாக பணியாற்ற வேண்டும். எனக்கு சினிமாவை தவிர வேற எதுவும் தெரியாது.

நான் பணத்திற்காக நடிக்கவில்லை.  ஆனாலும் பணம் வேண்டும். ஹபீபி படத்தில் நடித்த பிறகு என்னை எல்லோரும் யூசுப் என்று அழைக்கிறார்கள் ,  ஹபீபி திரைப்படத்தில் நடித்தது பெருமை.

இன்று கூட்டு குடும்ப வாழ்க்கை இல்லாமல் போய் விட்டது.

இன்று உதவி இயக்குநராக வேலை செய்வதையே பலர் அவமானமாக பார்க்கிறார்கள், பணத்தை மட்டுமே அவர்கள் பெரிது என்று கருதுகிறார்கள். வேறு எதையோ நோக்கி சினிமாவை திசை திருப்பி இழுத்து செல்கிறார்கள். அனுபவம் இல்லாமல் இன்று பலர் சினிமாவுக்கு வருகிறார்கள், அது சினிமா சீரழிவுக்கு காரணமாகிறது.

படம் இயக்குவதற்கு யாரும் நம்பி பணம் தருவார்களா என்று தெரியவில்லை எனவே நடிக்கப் போகிறேன்.

தொடர்ந்து பேசிய அவர், தனுஷ்க்கு தேசிய விருது கிடைத்தது, பெரும் மகிழ்ச்சி. இரண்டு விருது கிடைத்தது பெருமையாக உள்ளது, இன்னும் அவர் நிறைய விருதுகள் வாங்குவார் எனவும், குடும்பத்தில் உள்ளவர்கள் மகிழ்ச்சியில் உள்ளதாகவும் கூறினார்.

நடிகர் தனுஷுக்கு மட்டும் தொடர்ந்து விருதுகள் கிடைக்கிறது என்று விமர்சனம் வருகிறது என்ற கேள்விக்கு, விருது வழங்குவது தேர்வு குழு மற்றும் அரசு எடுக்கும் முடிவுதான்,  அவர் புதியாக விருதை பெறவில்லை. விருதுக்காக ஏங்குபவர் கிடையாது .

தனுஷ் கட்சி ஆரம்பித்தால் ஆரம்பித்து விட்டு போகட்டும், இல்லை என்றால் இல்லை அதை நான் கேட்பதில்லை என்றார். 

தனுஷ் அழைத்தால் படத்தில் நடிக்கப் போவேன் ஆனால் செல்வராகவன் நடிக்க கூப்பிட்டால் போக மாட்டேன், அவருடன் நடிப்பது கடினம் , அவர்  கொடூரமாக படம் எடுப்பதாக கூறினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version