விருதுகள் வழங்குவதில் சாதி பார்க்கப்படுவதாக விசிக நிர்வாகி சங்கத்தமிழன் சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

திரைப்பட வரலாற்றின் திசை வழி போக்கை தீர்மானித்த, தீர்மானித்துக் கொண்டிருக்கிற, அனைத்து மக்களின் பேராதரவை பெற்ற,  திரைப்பட புரட்சி இயக்குனர்கள் பா. ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் அவர்களுக்கு தொடர்ந்து விருதுகள் மறுக்கப்பட்டு வருவதாக சங்கத்தமிழன் தனது வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

திரைப்பட நடிகர் தனுஷ் அவர்களுக்கும் அவர் நடித்த ராயன் திரைப்பட குழுவினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்ற அதே நேரத்தில்…

தங்கலான், வாழைக்கு விருது கிடைக்கவில்லை ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள சங்கத்தமிழன் என்னும் சரவணன், திரைப்பட இயக்குனர்களை இயக்குனராக பாருங்கள் அதில் சாதியை வெறியை கலக்காதீர்கள் எனக் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version