சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தின் புதிய புகைப்படம் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் ‘சேயோன்’. நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. மதுரையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த முதல்கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. தற்போது அடுத்தகட்டப் படப்பிடிப்புக்கான பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்தநிலையில், ‘எல்லாம் இனிதே’ என்ற தலைப்புடன் புதிய புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்தப் புகைப்படத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு மலைப்பகுதியில் கம்பீரமாக நின்று கொண்டிருப்பது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.
‘சேயோன்’ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயனுடன் பாக்யஸ்ரீ போர்ஸ் நாயகியாக நடிக்க, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தத் திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
