தனுஷ் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் அவரது 55-வது திரைப்படத்தின் புதிய போஸ்டர் வரும் 18ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தனுஷின் ‘வுன்டர்பார் ஃபிலிம்ஸ்‘ (Wunderbar Films) மற்றும் ‘ஆர்டேக் ஸ்டூடியோஸ்‘ (RTake Studios) ஆகிய நிறுவனங்கள் இணைந்து தனுஷின் 55வது படத்தை தயாரிக்கின்றன. தனுஷ் உளவாளி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தில், மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி காவல் அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நாயகிகளாக சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் நடிக்கின்றனர். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். எழில் அரசு ஒளிப்பதிவாளராக செய்கிறார். விறுவிறுப்பான திரில்லர் கதையாக உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை இந்த ஆண்டு அக்டோபர் மாதம், ஆயுத பூஜை பண்டிகை காலத்தை முன்னிட்டு திரைக்குக் கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்தநிலையில், தற்போது தனுஷின் 55வது படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. வரும் 18ம் தேதி படத்தின் ஒரு புதிய போஸ்டர் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, படத்தின் First Look அல்லது டீசர் குறித்த தகவலாக இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. தனுஷ் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ‘D55’ திரைப்படம், தனுஷ் – ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகும் மற்றொரு முக்கியப் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

