கேரள சர்வதேச திரைப்பட விழா, டிச.12ம் தேதி முதல் திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. நாளை வரை (டிச.19) இந்தப்பட விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் சர்வதேச விழாக்களில் விருது பெற்ற பல கிளாசிக் திரைப்படங்கள் உள்பட 19 படங்களைத் திரையிட மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் மறுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
திரையிட அனுமதி மறுக்கப்பட்ட படங்களில், 1925-ம் ஆண்டு வெளியான சோவியத் திரைப்படமான ‘பேட்டில்ஷிப் பொடெம்கின்’, ‘தி ஹவர் ஆஃப் தி ஃபர்னசஸ்’, பாலஸ்தீனியக் கருப்பொருள்களை மையமாகக் கொண்ட ‘பாலஸ்தீன் 36’, ‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காசா’, ‘ஆல் தட்ஸ் லெஃப்ட் ஆஃப் யூ’, ‘வாஜிப்’ போன்றவையும் அடங்கும். இதனால் திரைப்பட இயக்குநர்களும், கேரள திரைப்பட விழாவின் ஒருங்கிணைப்பாளர்களும் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்துக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அதனால், உங்களால் அதைத் தடுக்க முடியாது. இப்படங்களைத் திரையிடக்கூடாது எனச் சொல்வது அறியாமையன்றி வேறெதுவும் இல்லை. இந்தப் படங்கள் அனைத்தும் நேர்த்தியாகத் தேர்வு செய்யப்பட்டவை. பல சர்வதேச படவிழாக்களில் விருதுகள் வென்ற படங்கள். இவற்றைத் தடுப்பது திரைப்படக் கலை பற்றிய புரிதல் இல்லாததையே காட்டுகிறது. படங்களின் தலைப்பை வைத்து முடிவு செய்யக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
