பி​ராந்​திய அமை​தி, ஒருங்​கிணைப்பு மற்​றும் பாது​காப்பு ஆகிய​வற்​றில் இந்​தி​யா​வும் எத்​தி​யோப்​பி​யா​வும் இயல்​பான கூட்​டாளி​கள் என்று பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார்.

பிரதமர் மோடி கடந்த செவ்​வாய்க்​கிழமை எத்​தி​யோப்​பி​யா​வுக்கு முதல்​முறை​யாக சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டார். அவருக்கு அங்கு சிறப்​பான வரவேற்பு அளிக்​கப்​பட்​டது. கிழக்கு ஆப்​பிரிக்க நாடான எத்​தி​யோப்​பி​யா​வின் நாடாளு​மன்ற கூட்​டு​க் கூட்​டத்​தில் பிரதமர் மோடி நேற்று பங்​கேற்று உரை​யாற்​றி​னார். பிரதமர் இது​வரை உலகள​வில் 17 நாடு​களின் நாடாளு​மன்​றத்​தில் உரை​யாற்​றி​யுள்ள நிலை​யில், இது அவருக்கு 18-வது நாடாளு​மன்ற உரை​யாகும்.

இந்த ஆண்​டின் தொடக்​கத்​தில் பாது​காப்பு ஒத்​துழைப்பு ஒப்​பந்​தம் கையெழுத்​தானதன் மூலம் பரஸ்பர ஒத்​துழைப்​புக்​கான எங்​களது அர்ப்​பணிப்பு மேலும் வலுப்​பெற்​றது. ராணுவ ஒத்​துழைப்​பில் இன்​னும் நெருக்​க​மாக செயல்பட இந்த ஒப்​பந்​தம் வழி​வகுத்​துள்​ளது.

எத்​தி​யோப்​பி​யா​வில் பல்​வேறு துறை​களில் இந்​திய நிறு​வனங்​கள் ரூ. 45,000 கோடிக்​கும் அதி​க​மாக (5 பில்​லியன் அமெரிக்க டாலர்) முதலீடு செய்​து, 75,000-க்​கும் மேற்​பட்ட வேலை​வாய்ப்​பு​களை உரு​வாக்​கி​யுள்​ளன. இந்த நிலை​யில், இருதரப்பு உறவை மேலும் வலுப்​படுத்த நாங்​கள் உறு​திபூண்​டுள்​ளோம்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version