முதலமைச்சர் விஜய் திரையில் மட்டும் கதாநாயகனாக இருக்க பிறந்தவர் இல்லை என்றும் அதை விட பெரிய விஷயத்திற்காக பிறந்தவர் என்றும் நடிகர் சமந்தா தெரிவித்துள்ளார்.
சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் விஜய்யை நடிகை சமந்தா சந்தித்து பேசினார். இதுகுறித்து தனது எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், புகழ்பெற்ற ஒரு திரைத்துறையை விட்டுவிட்டு, அதைவிட சவாலான அரசியல் களத்திற்கு வந்துள்ளது எளிதானது அல்ல என்றும் மாறாக ஒரு மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையால்தான் முதல்வர் விஜய் இந்த முடிவை எடுத்துள்ளார் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.
பதவி அதிகாரத்தால் மட்டுமல்ல, தனது அணுகுமுறையால் முதலமைச்சர் விஜய் மக்களின் நம்பிக்கையைத் தக்க வைப்பார் என்றும் அவர் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களை நிச்சயம் ஆச்சரியத்தில் ஆழ்த்துவார் என்றும் சமந்தா நம்பிக்கை தெரிவித்துள்ளார். முதலமைச்சர் விஜய்க்கு வலிமையும், ஞானமும், தைரியமும் கிடைக்கவும், அவரது பாதையில் உறுதியாக இருக்கவும் வாழ்த்துவதாக சமந்தா குறிப்பிட்டுள்ளார்.
