விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் 2-வது சிங்கிள் எப்போது என்பது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக இருக்கும் படம் ‘ஜன நாயகன்’. இந்தப் படத்தில் பிரபல நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, இந்தி நடிகர் பாபி தியோல், பசில் ஜோசப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது.
அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் முதல் பாடலான ‘தளபதி கச்சேரி’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் இரண்டாவது பாடல் வரும் 18-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட போஸ்டரை வைத்து பார்க்கும்போது, புரட்சிகரமான அரசியல் கலந்த பாடலாக இது இருக்கும் என்பதை உணர முடிகிறது.
படத்தின் டீசர் ஜனவரி 1-ம் தேதி ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வெளியாகும் என கூறப்படுகிறது. ‘ஜன நாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் ரூ.120 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
