Close Menu
    What's Hot

    இந்திய விண்வெளி வரலாற்றில் புதிய மைல்கல்: இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-1’ தனியார் ராக்கெட்

    ஊத்தங்கரை எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

    IMDb பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’… எகிறும் எதிர்பார்ப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»திலீப் விடுவிப்பை எதிர்த்து மேல்முறையீடு: கேரள அரசு முடிவு
    சினிமா

    திலீப் விடுவிப்பை எதிர்த்து மேல்முறையீடு: கேரள அரசு முடிவு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 8, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    dilipppp
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கேரள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் இருந்து நடிகர் திலீப் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கேரள சட்ட அமைச்சர் பி.ராஜீவ், “நடிகை பாலியல் வன்கொடுமை மற்றும் கடத்தல் வழக்கில் எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு மேல்முறையீடு செய்யும். இது தொடர்பாக முதல்வர் பினராயி விஜயனிடம் ஏற்கெனவே பேசி உள்ளேன். தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

    குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் அதன் பின்னணியில் உள்ள சதித் திட்டத்தை ஏன் நிறுவ முடியவில்லை என்பது குறித்து தீர்ப்பை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.

    இந்த வழக்கில் அரசு முன்வைத்த வாதங்கள் ஐந்து புத்தக தொகுப்புகளாக தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த பக்கங்கள் 1,512. ஆனால், தீர்ப்பு இந்த ஆவணங்களுடனோ அல்லது விசாரணையுடனோ ஒத்துப்போகவில்லை.

    மாநில அரசு எப்போதும் பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக நின்றுள்ளது. பினராயி விஜயன் முதல்வராக இல்லாதிருந்தால், இடது ஜனநாயக முன்னணி ஆட்சியில் இல்லாதிருந்தால் விசாரணை இத்தனை தீவிரமாக நடந்திருக்காது. காவல் துறையினர் இந்த வழக்கை விடா முயற்சியுடன் மேற்கொண்டனர். அரசு தரப்பும், தனது வாதத்தை நீதிமன்றத்தில் வலுவாக வைத்தது” எனத்தெரிவித்துள்ளார்.

    பின்னணி என்ன? – பிரபல மலையாள நடிகை ஒருவர் கடந்த 2017-ம் ஆண்டு காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார்.

    இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த கொச்சி போலீஸார், பாதிக்கப்பட்ட நடிகையின் முன்னாள் கார் ஓட்டுநர் பல்சர் சுனில் உட்பட 7 பேரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் இச்சம்பவத்துக்கு சதித்திட்டம் தீட்டியதாகப் பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது.

    8 ஆண்டுகள் நீடித்த விசாரணைக்குப் பிறகு இன்று (டிசம்பர் 8) எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிபதி ஹனி எம். வர்கீஸ், இந்த வழக்கில் நடிகர் திலீப்பை குற்றங்களில் இருந்து விடுவித்தார். ஒன்று முதல் ஆறு வரையிலான குற்றம்சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகள் என அறிவித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட 8-வது நபரான நடிகர் திலீப்பை விடுவித்தார்.

    இந்த வழக்கில் முதல் குற்றவாளி என்.எஸ்.சுனில் எனும் ‘புல்சர் சுனில்’. இரண்டாவது குற்றவாளி மார்ட்டின் ஆண்டனி, மூன்றாவது குற்றவாளி பி. மணிகண்டன், நான்காவது குற்றவாளி வி.பி. விஜீஷ், ஐந்தாவது குற்றவாளி எச்.சலீம் என்கிற வடிவால் சலீம், 6-வது குற்றவாளி பிரதீப், 7-வது குற்றவாளி சார்லி தாமஸ், ஒன்பதாவது குற்றவாளி சனில் குமார் என்கிற மேஸ்திரி சனில், மற்றும் பதினைந்தாவது குற்றவாளி சரத் நாயர் ஆவர்.

    இரண்டு முக்கிய சாட்சிகளான முன்னாள் எம்.எல்.ஏ பி.டி. தாமஸ் மற்றும் இயக்குநர் பாலச்சந்திர குமார் ஆகியோர் விசாரணையின் போது இறந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசெந்தில் பாலாஜி மீதான அமலாக்கத் துறை வழக்கு…. விசாரணையை தள்ளிவைக்க ஐகோர்ட் மறுப்பு!
    Next Article “ரூ.1,020 கோடி ஊழல் விவகாரத்தில் விசாரணைக்கு ஸ்டாலின் உத்தரவிடுவாரா?” – பழனிசாமி கேள்வி
    Editor TN Talks

    Related Posts

    IMDb பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’… எகிறும் எதிர்பார்ப்பு!

    July 17, 2026

    பிக் பாஸ் சீசன் 10!. முன்கூட்டியே களமிறங்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சி! ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

    July 17, 2026

    பிரபாஸின் ‘பௌசி’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு: டிச. 3-ல் பான்-இந்தியா வேட்டை!

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்திய விண்வெளி வரலாற்றில் புதிய மைல்கல்: இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-1’ தனியார் ராக்கெட்

    ஊத்தங்கரை எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

    IMDb பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’… எகிறும் எதிர்பார்ப்பு!

    கோவை தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை… அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

    மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு… மக்களுக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.