டிகர் விக்ரம் நடிப்பில், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான திரைப்படம் துருவ நட்சத்திரம்.

நிதிப்பிரச்னை தொடர்பாக, பைனான்சியர்கள் புண்ணியமூர்த்தி, பிரேம்குமார் ஆகியோர் தாக்கல் செய்த வழக்கில், படத்தை வெளியிட, 2023 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

பின்னர், கடந்த ஏப்ரல் மாதம் வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜூன் 15-க்குள் படத்தை வெளியிட அனுமதி வழங்கியதுடன், அதற்குள் வெளியிட முடியாவிட்டால் கால நீட்டிப்பு கோரி நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், குறிப்பிட்ட காலத்திற்குள் படத்தை வெளியிட இயலாததால், வெளியீட்டுக்கான அவகாசத்தை நீட்டிக்கக் கோரி இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தை ஜூலை 31-ம் தேதி வரை வெளியிடலாம் எனக் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version