Close Menu
    What's Hot

    ஓ.எஸ்.எம். முறையில் குளறுபடி –  சிபிஎஸ்இ தலைவர் ராகுல்சிங் அதிரடி மாற்றம்

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»நடிகை பாலியல் வழக்கு… 6 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை
    சினிமா

    நடிகை பாலியல் வழக்கு… 6 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை

    Editor TN TalksBy Editor TN TalksDecember 12, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    casee
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மலையாள நடிகை பாலியல் வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 6 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 17-ஆம் தேதி இரவில் அந்த நடிகை திருச்சூரில் இருந்து எர்ணாகுளம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரது காரை பின்தொடர்ந்து மற்றொரு காரில் சென்ற ஒரு கும்பல், நடிகையின் காரின் பின்புறத்தில் மோதியுள்ளனர். இதனால், காரை நிறுத்தி இருதரப்பும் வாக்குவாதம் செய்தபோது, வலுக்கட்டாயமாக நடிகையின் காருக்குள் அந்த கும்பல் நுழைந்தது.

    அந்த கும்பலை வழிநடத்திய பல்சர் சுனில், நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதுடன், நடிகையை பின்னாளில் மிரட்டுவதற்காக அதை செல்போனில் வீடியோ பதிவு செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இப்படி, திருச்சூர் – எர்ணாகுளம் தேசிய நெடுஞ்சாலையில் ஓடும் காரில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு அந்த நடிகை கும்பலிடம் சிக்கி தவித்ததாக FIR-இல் கூறப்பட்டுள்ளது.
    சினிமா பாணியில் வன்கொடுமையை அரங்கேற்றிய அந்த கும்பல், இறுதியாக இயக்குநர் ஒருவரின் வீட்டின் முன்பு நடிகையை இறக்கிவிட்டுவிட்டு தப்பியது. தனக்கு நடந்த துன்புறுத்தல் குறித்து, அந்த நடிகை தைரியமாக காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து, அந்த நடிகையின் முன்னாள் ஓட்டுநரான பல்சர் சுனில் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
    இந்த வழக்கின் தீர்ப்பு அண்மையில் அளிக்கப்பட்டது. அதில் நடிகையை பாலியல் துன்புறுத்தல் செய்த முதல் 6 பேரும் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. அதேநேரம், திலீப்பிற்கு குற்றத்தில் ஈடுபட்டதற்கான போதுமான ஆதாரங்கள் இல்லை எனவும் கூறி திலீப் விடுதலை செய்யப்பட்டார்.
    இந்த நிலையில் தான் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட 6 பேருக்கும் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, முதல் குற்றவாளியான பல்சர் சுனிலுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 7.5 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மற்ற 5 பேருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 50,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎன்எம்எம்எஸ் கல்வி உதவித்தொகை: மாணவர்கள் டிச.20 வரை விண்ணப்பிக்கலாம்
    Next Article அரசியலுக்கு வந்த ராமதாஸ் பேரன்… பாமகவில் முக்கிய பதவி
    Editor TN Talks

    Related Posts

    பொருநை ஆவணப்படத்துக்கு பெருமை – துருக்கி சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடத் தேர்வு

    June 2, 2026

    புலி பட விவகாரம்..!! முதல்வர் விஜய்க்கு எதிரான மனு தள்ளுபடி..!! சென்னை ஹைகோர்ட் அதிரடி..!!

    June 2, 2026

    MAGICAL MAY..! நடிகை திரிஷாவின் இன்ஸ்டா பதிவு வைரல்..!

    June 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஓ.எஸ்.எம். முறையில் குளறுபடி –  சிபிஎஸ்இ தலைவர் ராகுல்சிங் அதிரடி மாற்றம்

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.