இயக்குநர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா உட்பட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ’பறந்து போ’. தந்தை, மகனுக்கு இடையே உள்ள பாசப்பிணைப்பு உணர்த்தும் விதமாக உருவாகியுள்ள இப்படம் கடந்த 4-ம் தேதி வெளியாகி, ரசிகர்களிடம் வரஏற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், இப்படம் குறித்து நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்த பரபரப்பான உலகத்தை விட்டு விலகி உண்மையான வாழ்க்கை என்னவென்று உணர விரும்பினால், குழந்தைகளை கூட்டிக்கொண்டு மலை ஏறுங்கள்.. அல்லது ஏரியில் அவர்களுடன் நீந்தி விளையாடுங்கள்.. அல்லது அவர்களை ராம் சாரின் ”பறந்து போ” படத்திற்கு அழைத்துச் சென்று காணுங்கள்.

வாழ்க்கையில் நமக்கு என்ன தேவை , எதை இழக்கிறோம் என்பதை இந்த படம் அழகாக எடுத்துரைக்கிறது. நான் பார்த்த மிக இனிமையான படங்களில் இதுவும் ஒன்று. ராம் சார் நீங்கள் பெஸ்ட் இயக்குனர். சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி என ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version