Close Menu
    What's Hot

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»‘பராசக்தி’ வரையிலான திரைப் பயணமும், நிகழ்ந்த மாற்றமும்: சுதா கொங்கரா விவரிப்பு
    சினிமா

    ‘பராசக்தி’ வரையிலான திரைப் பயணமும், நிகழ்ந்த மாற்றமும்: சுதா கொங்கரா விவரிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 22, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sutha gongara
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ‘பராசக்தி’ எப்போது வெளியீடு என்ற கேள்விக்கு இயக்குநர் சுதா கொங்கரா பொங்கலில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார் .

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, பாசில் ஜோசப் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பராசக்தி’. டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தினை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடவுள்ளது. இதற்கு ஒளிப்பதிவாளராக ரவி கே சந்திரன், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

    ‘பராசக்தி’ படத்தில் உபயோகித்த பொருட்களை வைத்து சென்னையில் கண்காட்சி ஒன்று நடைபெற்று வருகிறது. இதனை காண மக்கள் அதிகப்படியாக வந்து கொண்டிருப்பதால் டிசம்பர் 25-ம் தேதி வரை நீட்டித்திருக்கிறார்கள். இந்தக் கண்காட்சியைக் காண வந்த இயக்குநர் சுதா கொங்கரா பத்திரிகையாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

    அதில் சுதா கொங்கரா பேசியபோது, “‘பராசக்தி’ எப்போது வெளியாகும் என்பதை கூடிய விரைவில் தயாரிப்பாளர் தெரிவிப்பார். என்னிடம் கேட்டால் ‘பொங்கல் வெளியீடு’ என்பதுதான் பதில்.

    இயக்குநர்களில் ஆண் – பெண் என்றெல்லாம் இப்போது பார்ப்பதில்லை. ஃபாரா கான் எப்போதோ பெரிய பட்ஜெட் படங்களை எல்லாம் இயக்கிவிட்டார். இப்போது அனைவருமே இயக்குநர் என்ற ரீதியில் மட்டுமே பார்க்கிறார்கள். அந்தளவுக்கு திரையுலகம் இப்போது மாறியிருக்கிறது. அப்படி மாறவில்லை என்றால் அதை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்.

    திரையுலகில் கஷ்டங்கள் இருக்கிறது. ஆனால், நாம் முன்னால் அடி எடுத்துவைத்து பயணிக்க வேண்டும். அப்படி பயணித்தால் மட்டுமே நம்மை பின்தொடர்ந்து பலரும் வருவார்கள். ஆனால், ஆண் – பெண் என்ற பார்வை இப்போது இல்லை என்பதே என் கருத்து.

    முன்பு என்னால் ஒரு பெரிய நாயகரை அணுகி கதை சொல்ல முடியாத சூழல் இருந்தது. இப்போது அனைத்து மொழிகளில் இருந்தும் என்னை பெரிய நாயகர்கள் படம் பண்ணலாமா என்று கேட்கிறார்கள்.

    பெண்கள் என்றாலே சின்ன படங்கள்தான் எடுப்பார்கள் என்பதெல்லாம் உடைந்துவிட்டது. ‘சூரரைப் போற்று’, ‘இறுதிச்சுற்று’ மற்றும் ‘பராசக்தி’ உள்ளிட்ட படங்களை ஒரு சாதனையாக பார்க்கவில்லை. அது ஒரு பயணம் அவ்வளவே. அதன் மூலம் சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை ஒரு சாதனையாக பார்க்கிறேன். அது எனக்கு பிடித்திருக்கிறது” என்று பேசினார் சுதா கொங்காரா.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவங்கதேசத்தில் மற்றொரு மாணவர் தலைவர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு!
    Next Article தென்னிந்திய படப்பிடிப்பில் மோசமான அனுபவம்: ராதிகா ஆப்தே வருத்தம்
    Editor TN Talks

    Related Posts

    ஜெயிலர் 2 படத்தின் அசத்தல் அப்டேட்..! படக்குழுவின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

    July 2, 2026

    இணையத்தில் வெளியான ஜனநாயகன் படத்தை 1.20கோடி பேர் பார்த்துள்ளனர்..! ஜாமின் மனு தள்ளுபடி..!

    July 2, 2026

    இந்த மாதம் வெளியாகிறதா ‘ஜனநாயகன்’? வைரலாகும் பரபரப்பு தகவல்..!!

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.