யஷ் நடித்துள்ள ‘டாக்ஸிக்’ (Toxic) திரைப்படம் ஆகஸ்ட் 26ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் புதிய போஸ்டருடன் படத்தின் ரிலீஸ் தேதியையும் வெளியிட்டுள்ளது. கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் நேரடியாகப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. பண்டிகை விடுமுறை நாட்களைக் குறிவைத்து ரிலீஸ் தேதி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
டாக்ஸிக் திரைப்படம் 2025 ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது பின்னர் தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து, 2026 மார்ச் 19ல் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிய பதற்றம் காரணமாக சர்வதேச வியாபாரம் பாதிக்கப்படும் என்பதால் அப்போதும் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.
அதன் பிறகு ஜூன் 4 வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளநிலையில், தற்போது ஆகஸ்ட் 26ம் தேதி டாக்ஸிக் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
